அதிதியை யாரும் விமர்சிக்காதீங்க.. வருத்தமாக இருக்கு.. பாடகி ராஜலட்சுமி சொல்லியிருக்கறத பாருங்க!
சென்னை : விருமன் படத்தில் மதுர வீரன் பாடல் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடலை அதிதி ஷங்கர் பாடியுள்ளார்.
இதனிடையே இந்தப் பாடலை முன்னதாக பிரபல பாடகி ராஜலட்சுமி பாடியதாகவும், அதை நீக்கிவிட்டு அதிதியின் குரலில் பாடலை மீண்டும் உருவாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து அதிதிக்கு எதிரான பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ராஜலட்சுமி பேசியுள்ளார்.

விருமன் படம்
நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் பிரபல இயக்குநர் முத்தையா இயக்கியுள்ள விருமன் படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின்மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார் அதிதி.

மதுர வீரன் பாடல்
படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் மதுர வீரன் பாடல் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து இந்தப் பாடலை முதலில் பாடியது பிரபல பின்னணி பாடகி ராஜலட்சுமிதானாம்.

அதிதி பாடிய பாடல்
ஆனால் இந்தப் பாடலை எடுத்துவிட்டு, தொடர்ந்து அதிதி ஷங்கர் குரலில் பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாடலே தற்போது படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இதுகுறித்து அதிதி ஷங்கர் பல விமர்சனங்களை பெற்றார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ராஜலட்சுமி தற்போது பேசியுள்ளார்.

ராஜலட்சுமி விளக்கம்
மதுர வீரன் பாடலில் தன்னுடைய குரலுக்கு பதிலாக அதிதியின் குரல் இடம்பெற்றதால் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அதிதி சிறப்பாக பாடுவதாகவும் அவர் கூறியுள்ளார். இது சினிமாவில் வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யாருடைய குரல் சிறப்பாக பொருந்துகிறதோ அதை இசையமைப்பாளர்கள் பயன்படுத்துவது நடைமுறைதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

வருத்தத்தை வெளிப்படுத்திய ராஜலட்சுமி
இதற்காக அதிதி ஷங்கரை அனைவரும் விமர்சிப்பது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் கடந்த சில தினங்களாக அதிதி மீது வைக்கப்பட்டு வந்த விமர்சனங்களுக்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளார் ராஜலட்சுமி. அடுத்தடுத்து சிறப்பான பாடல்களை பாடி வருகிறார் ராஜலட்சுமி. இவரது வாய்சில் புஷ்பா படத்தில் வெளியான சாமி பாடல் சிறப்பான வரவேற்பை பெற்றது.


Click it and Unblock the Notifications











