தியாகராஜ சுவாமிகளை அவதூறாக பேசிய கமல்.. கடுமையாக விளாசி தள்ளிய பிரபல பாடகர்!

சென்னை: தியாகராஜ சுவாமிகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் கமல்ஹாசனை பிரபல பக்தி பாடகர் ராஜு வீரமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Recommended Video

கமல் ஹாசன் செய்த துரோகம் | Hey Ram Final Cut | Nawazuddin Siddiqui

நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படம் தலைவன் இருக்கின்றான். இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் வடிவேல் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை விஜய் மற்றும் விஜய் சேதுபதி இன்ஸ்டாகிராமில் லைவில் பங்கேற்றனர்.

சுவாரசிய தகவல்

சுவாரசிய தகவல்

இதில் தலைவன் இருக்கின்றான் படம் குறித்த முக்கிய தகவல்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கேள்விகளை கேட்க கமல்ஹாசன் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

தியாகராஜ சுவாமிகள்

தியாகராஜ சுவாமிகள்

இதில் அவர் பேசிய ஒரு விஷயம் பூதாகரமாகியிருக்கிறது. அதாவது, விஜய் சேதுபதி கேட்ட கேள்விக்கு, சகலகலா வல்லவன் போன்று படங்கள் எடுத்தால்தான் காசு பார்க்க முடியும், இல்லன்னா தியாகராஜ சுவாமிகள் மாதிரி பிச்சை எடுக்க முடியாது என கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்கனும்

மன்னிப்பு கேட்கனும்

இந்த வீடியோக்கள் வைரலாகவே தியாகராஜ சுவாமிகள் பிச்சை எடுத்தார் என எப்படி கூறலாம் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தியாகராஜ சுவாமிகள் குறித்து அவதூறாக பேசிய கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஏக வசனம்

ஏக வசனம்

இந்நிலையில் பிரபல பக்தி பாடகரான வீரமணி ராஜு நடிகர் கமல்ஹாசனை விளாசியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், கமல்ஹாசனை போடா வாடா என ஏக வசனம் பேசியிருக்கிறார். தியாகராஜ சுவாமிகள் குறித்து பேச கமல்ஹாசனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

ராமரை தரிசித்த தியாகராஜ பாகவதரை பற்றி பேசி கமல்ஹாசன் பாவத்தை சேர்க்க கூடாது என்றும் அவர் கூறினார். மேலும் விஸ்வரூபம் படத்தின் போது கமல்தான் பிச்சைக் கேட்டார் என்றும் விளாசி தள்ளினார். தியாகராஜ சுவாமிகளை அவதூறாக பேசிய கமலுக்கு பலரும் கடுமையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X