விஜய் டிவியால்.. திருமண பந்தத்தில் இணைந்த கலைக் குடும்பத்து பிக்பாஸ் பிரபலம்!

Recommended Video

Ramya ask marriage vide | புது வாழ்க்கையில் அடி வைத்த bigg boss ramya NSK

சென்னை: என்.எஸ்.கேவின் பேத்தி ரம்யா இப்போது திருமண பந்தத்தில் இணைந்து இனிய குடும்ப வாழ்க்கையில் திளைக்க ஆரம்பித்துள்ளார்.

சினிமாவில் பழம் பெரும் நடிகராக இருந்த என்எஸ் கலைவாணரின் பேத்தி பாடகி ரம்யா. ஆனாலும், தான் இன்னாரின் பேத்தி என்பதை தனக்கான விசிட்டிங் கார்டாக எங்கேயும் உபயோகிப்பதில்லை ரம்யா.

சங்கீதத்தின் மீது மிகுந்தஆர்வம் கொண்ட இவர் தனது சிறு வயது முதலே கர்னாடிக் முறைபடி பாடல் கற்று வந்தார். மேலும் கர்னாடிக் முதல் குத்து பாடல் வரை அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் ஏராளமான பின்னணி பாடல்களை பாடியுள்ளார்.

முன்னணி பாடகி

முன்னணி பாடகி

இவ்வாறு பாடகியாக முன்னணியில் இருந்த அவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். மேலும் சிறப்பான விளையாட்டாலும், தனது குணத்தாலும் அவர் மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்தார்.

சத்யாவுடன் கல்யாணம்

சத்யாவுடன் கல்யாணம்

என்.எஸ்.கே.ரம்யா தொலைக்காட்சி நடிகர் சத்யாவை திருமணம் செய்து கொண்டார், அவர் விஜய் டிவியின் 'நீலகுயில்' சீரியலில் கதாநாயகனாக நடித்தார். அவரோடு இணைந்து போட்டியிட்ட ஜனனி ஐயர் மற்றும் மும்தாஜ் திருமணத்தில் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தினர்.

என்எஸ்கே பேத்தி

என்எஸ்கே பேத்தி

பாடகி என்.எஸ்.கே.ரம்யா தமிழ் சினிமாவின் லெஜன்ட்ரி காமெடி நடிகர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தி. என்.எஸ்.கே அவரது தந்தை வழி தாத்தா. முன்னணி நடிகராக வலம் வந்த கே.ஆர். ராமசாமி அவரது அம்மாவின் வழி தாத்தா.

இது 2வது திருமணம்

இது 2வது திருமணம்

முன்னதாக 2017 ஆம் ஆண்டில் பின்னணி பாடகர் அர்ஜுனுடன் திருமணம் செய்து கொண்டார் ரம்யா. ஆனால் மனக் கசப்பு ஏற்பட்டு பின்னர் பிரிந்தார். இப்போது 2வது திருமணம் செய்துள்ளார். இந்த ஸ்டார் ஜோடி பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X