அம்பானி மகன் திருமணம்.. CALM DOWN பாடலை பாட ராப் பாடகர் ரேமாவுக்கு இத்தனை கோடியா?

மும்பை: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்டின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இந்திய பிரபலங்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களைகட்டி உள்ள இந்த திருமண விழாவில், ராப் பாடகர் ரேமாவுக்கு "CALM DOWN'' பாடலை பாடுவதற்கு கோடி கணக்கில் சம்பளம் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது. கோலாகலமாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்ற இத்திருமண விழாவில் பல சர்வதேசப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அமெரிக்க மல்யுத்த வீரரும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனாவும் இத்திருமணத்தில் காணப்பட்டார். பிரதமர் மோடி நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். முன்னாள் இங்கிலாந்து பிரதமர்கள் டோனி பிளேயர் மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

Anant Ambani Radhika Merchant

அம்பானி மகன் திருமணம்: திரைப்பட நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான் முதல் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, அட்லி, பிரியா அட்லீ, ரஜினிகாந்த் தனது மனைவி மகள் சௌந்தர்யா மற்றும் பேரனுடன் கலந்து கொண்டார். அதே போல நயன்தாரா, விக்னேஷ் சிவன், சூர்யா, ஜோதிகா, ஏ.ஆர். ரஹ்மான், ராம் சரண், உபாசனா, கிரிக்கெட் வீரர்கள் தோனி, கம்பீர், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா என பல பிரபலங்கள் இதில் பங்கேற்றனர்.

ஆட்டம் போட்ட சூப்பர் ஸ்டார்: திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆனந்த் அம்பானியின் மகளுடன் சேர்ந்து நடனமாடினார். அவருடன் அனில் கபூர், ரன்வீர் கபூர், அம்பானி என அனைவரும் காலன் குடியான் என்ற பாலிவுட் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினர். வழக்கமாக எந்த பொது நிகழ்ச்சிகளுக்கு வந்தாலும், சைலன்டாக சென்றுவிடும் ரஜினிகாந்த், ஆனால் அம்பானி வீட்டின் திருமணத்தில் ஆட்டம் போட்டதை பார்த்து ரசிகர்கள் பாராட்டியும் விமர்சித்தும் வருகின்றனர். தற்போது இந்த வீடியோ தான் சோஷியல் மீடியாவில் பேசு பொருளாக உள்ளது.

கோடி கோடியா சம்பளம்: இதில் கலந்துகொண்ட பிரபல ராப் பாடகர் ரேமாவுக்கு "CALM DOWN'' என்ற பாடல் பாடுவதற்கு கோடி கணக்கில் சம்பளம் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திருமண விழாவில், பிரபல பாடகர்களான ஜஸ்டின் பீபர், ரேமா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு கச்சேரி நடத்தினர். இதில், சம்பளமாக ஜஸ்டின் பீபருக்கு ரூ. 83 கோடி வழங்கப்பட்டதாகவும், நைஜீரிய ராப் பாடகரான ரேமா 'காம் டவுன்' பாடலுக்குப் பெயர் பெற்றவர். அவருக்கு இந்த திருமண விழாவில் 'காம் டவுன்' என்ற ஒரு பாடலை பாடுவதற்காக மட்டும் ரூ.25 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தை கேட்டு பலர் வாய் பிளந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X