காதலர் விஷம் குடித்து தற்கொலை.. மயங்கி விழுந்த பாடகி சீரியஸ்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

By

மும்பை: காதலர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த பின்னணி பாடகி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தி சேனல் ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சி, இண்டியன் ஐடோல். இதன் 10 வது சீசனில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் பாடகி, ரேனு நாகர்.

நட்பு காதலானது

நட்பு காதலானது

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் பகுதியைச் சேர்ந்தவர் இவர். இதே பகுதியை சேர்ந்த ரவிசங்கர் என்பவர் ரேணுவுக்கு தபேலா கற்றுக்கொடுக்க அவர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். முதலில் குரு, சிஷ்யையாக தொடங்கிய பழக்கம் பிறகு நட்பானது. நட்பு காதலானது. கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர்.

மும்பை சென்று

மும்பை சென்று

ரவிக்குத் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருந்தும் அவரை ரேணு காதலித்தார்.. கொரோனா காலகட்டமான கடந்த ஜூன் மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சேர்ந்து வாழ முடிவு செய்தனர். அதன்படி மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு வந்தார் ரவி. ரேணுவும் பெற்றோரை விட்டுவிட்டு வந்தார்.

காதல் தெரியும்

காதல் தெரியும்

கடந்த ஜூன் மாதம் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறினர். இந்நிலையில் பாடகி ரேணுவின் தந்தை, ஆல்வார் போலீசில் புகார் அளித்தார். அவர்களுக்கு இவர்களின் காதல் தெரியும் என்பதால், தனது பெண்ணை ஏமாற்றி ரவி கடத்திச் சென்றுவிட்டதாகப் புகாரில் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், இருவரும் சொந்த ஊர் திரும்பினர்,

விஷம் குடித்தார்

விஷம் குடித்தார்

போலீசார் இருவரையும் அழைத்து விசாரித்தனர். இருவருடைய வாக்குமூலங்களையும் பதிவு செய்தபின் விட்டுவிட்டனர். இந்நிலையில் வீட்டுக்குச் சென்ற ரவி, கடந்த புதன்கிழமை விஷம் குடித்து மயங்கினார். அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மயங்கி விழுந்தார்

மயங்கி விழுந்தார்

இந்த தகவல் பாடகி ரேணுவுக்குத் தெரிந்ததும், அதிர்ச்சியில் அவரும் மயங்கி விழுந்தார். அவருக்குப் பேச்சு மூச்சு இல்லை. இதனால், அங்குள்ள மிட்டல் மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர். தீவிரச் சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X