என்னத்தவம் செஞ்சேனோ... பாடலில் உருக்கம்... வார்த்தைகளில் வாழ்த்து... சூப்பர் சைந்தவி
சென்னை : பாடகி சைந்தவி சிறந்த பின்னணி மற்றும் கர்நாடக சங்கீத பாடகியாவார்.
Recommended Video
இவர் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ்குமாரின் மனைவி.
இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி இவர் தனது வாழ்த்துக்களை பாடல்மூலம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிறப்பான பாடல்கள்
பாடகி சைந்தவி சிறந்த பின்னணி மற்றும் கர்நாடக சங்கீத பாடகியாக வலம் வருகிறார். இவர் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ்குமாரை காதலித்து மணம் செய்துள்ளார். பல்வேறு சிறப்பான பாடல்களுக்கு சொந்தக்காரராக இவர் உள்ளார். ஏறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் இவர் பாடியுள்ளார்.

பல்வேறு விருதுகள்
மயக்கம் என்ன படத்தில் இவர் பாடிய பிறை தேடும் இரவிலே பாடலுக்காக மிர்ச்சி மியூசிக் அவார்ட் மற்றும் விஜய் மியூசிக் அவார்ட் ஆகியவற்றை பெற்றுள்ளார். சமீபத்தில் வெளிவந்த அசுரன் படத்தில் எள்ளு வய பூக்கலியே பாடலை பாடி ஆனந்த விகடன் சினிமா அவார்டை பெற்றுள்ளார்.

விருப்பமான பாடல்
டோலிவுட்டிலும் பல்வேறு சிறப்பான பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் இசைஞானி இளையராஜாவின் பிறந்ததினத்தையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் தேவர்மகன் படத்தில் தனது விருப்பத்திற்குரிய பாடலை பாடி அதன் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

பாடலால் வாழ்த்து
கமல்ஹாசன் மற்றும் ஜானகி வாய்சில் வெளிவந்த அந்த படத்தின் இஞ்சி இடுப்பழகி பாடலை அவர் பாடியுள்ளார். இது இளையராஜா இசையில் தன்னுடைய விருப்பத்திற்குரிய பாடல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய பாடலால் அவர் இசைஞானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











