Saindhavi: உன்னாலே என் ஜீவன் வாழுதே.. ஜிவி பிரகாஷுக்காக சைந்தவி செய்த அடுத்தடுத்த சிறப்பான விஷயம்!
சென்னை: இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருபவர் ஜிவி பிரகாஷ். ஒருபுறம் நடிகராக 25வது படத்தில் நடித்துவரும் ஜிவி பிரகாஷ், மறுபுறம் தன்னுடைய இசையில் 100வது படத்திலும் இயங்கி வருகிறார். தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான முடிவையும் சமீபத்தில் அறிவித்திருந்தார். பாடகி சைந்தவியுடனான தன்னுடைய திருமணத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார். ஆயினும் தங்களுடைய நட்பு தொடரும் என்று இருவருமே கூட்டாக தெரிவித்துள்ளனர். இதை நிரூபிக்கும்வகையில் சமீபத்தில் துபாயில் நடந்த ஜிவி பிரகாஷ் இசை நிகழ்ச்சியில் இணைந்து பாடினார் சைந்தவி.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்: வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். இந்தப் படம் ஜிவி பிரகாஷுக்கு மிகப் பெரிய அளவில் அறிமுகத்தை பெற்றுக் கொடுத்த நிலையில் அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் என இணைந்து மாஸ் காட்டினார் ஜிவி பிரகாஷ். இசை அசுரன் என்ற பெயரை பெற்ற இவர், நடிப்பிலும் தன்னை இணைத்துக் கொண்டார். ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது கிங்ஸ்டன் என்ற தன்னுடைய 25வது படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே இசையமைப்பாளராக 100வது படத்திலும் இணைந்துள்ளார்.
ஜிவி பிரகாஷின் 100வது படம்: சமீபத்தில் இவரது 100வது படமான எஸ்கே25 படத்தின் பூஜை போடப்பட்டது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாக அமைந்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அடுத்தடுத்து சிறப்பான படங்களில் இணைந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். சமீபத்தில் இவரது இசையமைப்பில் வெளியான அமரன், லக்கி பாஸ்கர் என இரு படங்களும் வெற்றிப்படங்களாக மாறியுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான முடிசை இவர் எடுத்துள்ளார். சைந்தவியை பிரியும் முடிவை இவர் எடுத்ததன் மூலம் தன்னுடைய 11 ஆண்டுகால வாழ்க்கைக்கு எண்ட்கார்டு போட்டுள்ளார்.
ஜிவி பிரகாஷ்-சைந்தவி பிரிவு: இவர்கள் இருவருக்கும் ஆத்வி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், இவர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் திரைத்துறையினர் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனிடையே, தங்கள் திருமண பந்தத்தை மட்டுமே தாங்கள் நிறைவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் நண்பர்களாக தங்களது நட்பு தொடரும் என்றும் இவர்கள் அறிவித்துள்ளனர். சமீபத்தில் துபாயில் நடந்த ஜி வி பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சைந்தவி பாடல் பாடினார். சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து பிறை தேடும் இரவிலே என்ற மெஸ்மரைசிங் பாடலை பாடியது ரசிகர்களை மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியது.
சிறந்த இசையமைப்பாளர் விருது: இவர்கள் இருவரும் இணைய வேண்டும் என்ற விருப்பத்தை தொடர்ந்து ரசிகர்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில் நேற்றைய தினம் நடந்த 22வது சர்வதேச திரைப்பட விழாவில் சைந்தவி பங்கேற்று பாடல் பாடினார். இந்த பாடல் ஜிவி பிரகாஷ் இசையில் அவர் பாடிய உன்னாலே என் ஜீவன் பாடல். ஏராளமான பாடல்கள் இருந்த போதிலும் இந்த பாடலை சைந்தவி பாடியது அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் ஜிவி பிரகாஷ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த விழாவில் ஜிவி பிரகாஷிற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. அமரன் படத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
கைத்தட்டி பாராட்டிய சைந்தவி: இந்நிலையில் அவர் மேடையேறி இந்த விருதை வாங்கிய போது, தொடர்ந்து தன்னுடைய கைத்தட்டல்களை பரிசாக கொடுத்தார் சைந்தவி. அவரது இந்த செயலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து பாராட்டுகளை கொடுத்து வருகிறது. ஜிவி. பிரகாஷின் பாடலை பாடியதுடன் அவர் விருது பெற்றதற்கும் தன்னுடைய பாராட்டை சைந்தவி வழங்கியது இவர்களின் மெச்சூர்ட்னெஸை காட்டுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தம்பதிகளாக இருந்து பிரிந்த போதிலும் நண்பர்களாக தங்களின் நட்பை தொடர்வோம் என்று கூறியதுடன் அதை தொடர்ந்து இவர்கள் செயல்படுத்தி வருவது மிகப்பெரிய கவனத்தை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











