என்னது… முதல் மரியாதை படத்தில் முதலில் நடிக்கயிருந்த நடிகர் இவரா..?

சென்னை : இந்திய சினிமாவில் இன்றளவும் நடிப்பிற்கு மிகப்பெரிய உதாரணம் என பலராலும் போற்றப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

Recommended Video

SINGER SRINIDHI CHAT : இளையராஜா சார் நா கொஞ்சம் பயம் | V-CONNECT | Filmibeat Tamil

தமிழில் இவர் நடிக்காத வேடங்களில் இல்லை, ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை என்று அனைவரும் சொல்லும் வகையில் இந்திய திரைத்துறைக்கு ஒரு மிகப்பெரிய அடையாளமாக விளங்குபவர்.

இவ்வாறு நடிப்பின் சின்னமாய் விளங்கி வரும் சிவாஜி கணேசன் நடித்த "முதல் மரியாதை" திரைப்படம் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது. இவ்வாறு பலராலும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரபல பாடகர் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

மிகப்பெரிய வெற்றியடைந்து

மிகப்பெரிய வெற்றியடைந்து

கிராமத்து கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குனர் பாரதிராஜா எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் முதல் மரியாதை. 1985 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் வெளியான போது மிகக் குறைந்த அளவிலேயே ரசிகர்கள் காண வந்த நிலையில் ஒரு சில வாரங்களிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மிகப்பெரிய வெற்றியடைந்து 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

காதலுக்கு வயதில்லை

காதலுக்கு வயதில்லை

இவ்வாறு மிகப்பெரிய வெற்றியடைந்த முதல் மரியாதை திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து ராதா, வடிவுகரசி, என மிகப் பெரிய திரை பட்டாளமே நடித்து இருந்தது. ஆற்றில் படகோட்டும் ஒரு சாதாரண பெண்மணி அந்த ஊரில் மிகப் பெரிய மனிதராக மதிக்கப்படும் அப்பா வயது உள்ள ஒருவரை காதலிக்கிறார் என்ற மையக் கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் மரியாதை பலரையும் ரசிக்க வைத்து பல பாராட்டுகளைப் பெற்று விருதுகளை வாரிக்குவித்தது.

எஸ். பி பாலசுப்ரமணியம்

எஸ். பி பாலசுப்ரமணியம்

சிறந்த படம் மற்றும் சிறந்த பாடலாசிரியர் என இரண்டு தேசிய விருதுகளை வென்று கம்பீரமாக இன்றும் நிலைத்து நிற்கக்கூடிய முதல் மரியாதை திரைப்படத்தில் சிவாஜி கணேசன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரபல பாடகரும் நடிகருமான எஸ். பி பாலசுப்ரமணியம்.

நடித்தும் உள்ளார்

நடித்தும் உள்ளார்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் எக்கச்சக்கமான பாடல்களைப் பாடி தனது குரலின் மூலம் இந்திய மக்கள் அனைவரையும் வசியம் செய்து வந்தவர் பல படங்களில் பாடல்களைப் பாடியது மட்டுமல்லாமல் நடித்தும் உள்ளார்.

முதலில் அணுகப்பட்டார்

முதலில் அணுகப்பட்டார்

காதலன், பிரியமானவளே, கேளடி கண்மணி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்ற எஸ் பி பாலசுப்ரமணியம் " முதல் மரியாதை" திரைப்படத்தில் சிவாஜி கணேசன் நடித்த கதாபாத்திரத்திற்கு முதல் முதலில் அணுகப்பட்டார். ஒருசில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து பின் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இந்திய அளவில் மிகப் பெரிய கவனத்தை பெற்றது.

நடிக்க இருந்தது நான் தான்

நடிக்க இருந்தது நான் தான்

சில வருடங்களுக்கு முன்பு பாடல் கச்சேரியில் விஜய் டிவி பிரியங்கா தொகுத்து வழங்க பாடலுக்கு இடையில் எஸ்.பி.பி மற்றும் பிரியங்கா பேசி கொள்கையில் திடீரென பிரியங்கா முதல் மரியாதை படத்தை பற்றி கேட்க அதற்கு எஸ்.பி பியும் ஆம் அந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான்தான் என யாரும் அறியாத தகவலை கூறி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

அசைக்க முடியாத நட்சத்திரமாக

அசைக்க முடியாத நட்சத்திரமாக

ஒருவேளை முதல் மரியாதை திரைப்படத்தில் எஸ்.பி பாலசுப்பிரமணியம் நடித்திருந்தால் இந்நேரம் பாடகராக எவ்வாறு இந்திய அளவில் மிக உயர்ந்து நிற்கிறரோ அதே போன்று நடிப்பிலும் ஒரு அசைக்க முடியாத நட்சத்திரமாக இருந்திருப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X