பிரபல ஹீரோவுடன் இணைந்த குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி!
சென்னை : சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி.
Recommended Video
இவர் தற்போது டான் மற்றும் காசேதான் கடவுளடா படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் பல பாடல்களை தொடர்ந்து பாடி வருகிறார். சில ஹிட்களையும் கொடுத்துள்ளார்.

சூப்பர் சிங்கரில் அறிமுகம்
விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் முதலில் அறிமுகமானவர் ஷிவாங்கி. இவரது குழந்தைத்தனமான பாவனைகள் மூலம் குக் வித் கோமாளியில் கோமாளியாக வந்தார். இந்த இரு நிகழ்ச்சிகளின்மூலம் இவர் மிகவும் பிரபலமடைந்துள்ளார். முக்கியமாக குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி இவருக்கு அதிகமான ரசிகர்களை கொடுத்துள்ளது.

ரசிகர்களிடையே பிரபலம்
அந்த நிகழ்ச்சியில் இவரது செயல்பாடுகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். ஒவ்வொரு எபிசோடையும் இவருக்காக பார்த்தவர்கள் அதிகமாக உள்ளனர். அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மீண்டும் துவங்கவுள்ள நிலையில், அதிலும் இவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படங்களில் ஷிவாங்கி
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் இவர் படவாய்ப்புகளையும் பெற்றுள்ளார். சிவகார்த்திகேயனின் டான் படம் மற்றும் சிவாவின் காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களில் இவர் தற்போது நடித்து வருகிறார். மேலும் சில பாடல்களையும் பாடி வருகிறார். இவற்றில் சில பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன.

சிம்புவுடன் டூயட்
இந்நிலையில் நடிகர் சிம்புவுடன் இணைந்து இவர் ஒரு டூயட் பாடலை பாடியுள்ளார். மாயன் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள மச்சி என்ற அந்தப் பாடலை சிம்புவுடன் இணைந்து இவர் பாடியுள்ளார். சிம்புவுக்கு இணையாக இவர் அந்த பாடலை பாடியுள்ளதாக படக்குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஷிவாங்கி மகிழ்ச்சி
இதனிடையே இந்த பாடலை பாடியுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஷிவாங்கி, பாடலை கேட்டுவிட்டு அதுகுறித்து விமர்சனங்களை அளிக்குமாறு ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். விரைவில் இந்தப் பாடலை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் இந்த ஆண்டின் இறுதியில் ரிலீசாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் பாடல் ரிலீஸ்
இந்தப் பாடலின் ப்ரமோ சமீபத்தில் வெளியிடப்பட்டு சிறந்த பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்நிலையில் முழுமையான பாடலை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தில் வினோத் மோகன் மற்றும் பிந்து மாதவி இணைந்து நடித்துள்ளனர். ராஜேஷ் கண்ணா என்பவர் இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











