கொரோனா பாதிப்பு.. சிகிச்சைக்கு சென்ற பிக் பாஸ் பாடகர் மாரடைப்பால் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!

By

கொச்சி: மாரடைப்பு காரணமாக பிரபல பாடகர் திடீரென மரணமடைந்திருப்பது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேகமாக பரவும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை மிரட்டி வருகிறது.

இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இன்னும் முழுமையாக கொரோனா ஒழிந்துவிடவில்லை.

வைரஸின் தாக்கம்

வைரஸின் தாக்கம்

சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக தொடரும் இந்த வைரஸின் தாக்கம் இன்னும் தணியவில்லை. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பின்னணி பாடகர்

பின்னணி பாடகர்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.35 கோடியைக் கடந்துள்ளது. இந்நிலையில் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர் ஒருவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சோமதாஸ் சாத்தனூர்

சோமதாஸ் சாத்தனூர்

பிரபல மலையாள பின்னணி பாடகர் சோமதாஸ். கேரள மாநிலம் கொல்லம் அருகிலுள்ள சாத்தனூரை சேர்ந்தவர். மலையாளத்தில் சில படங்களில் பாடல்களை பாடியுள்ள இவர், மேடை கச்சேரிகளிலும் பாடி வந்தார். சேனல் ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமான இவர், வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனை

மலையாள பிக் பாஸ் வீட்டில் பங்கேற்றதன் மூலம் இன்னும் பிரபலமானார். இவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொல்லம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் கொரோனாவில் இருந்து அவர் மீண்டார்.

சாதாரண வார்டு

சாதாரண வார்டு

அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு டாக்டர்கள் மாற்ற நினைத்தனர். அப்போது அவருக்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 42.

ஆட்டோ டிரைவர்

ஆட்டோ டிரைவர்

இதையடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் அவர் மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த சோமதாஸுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். சாதாரண ஆட்டோ டிரைவராக இருந்து பாடகராக மாறியவர் சோமதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X