தளபதி 64 படத்தில் நடிக்க போகும் சௌந்தர்யா பாலா நந்தகுமார்
Recommended Video
சென்னை:தற்போது தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் தான் தளபதி 64 .படத்தை சேவியர் ப்ரிட்டோவின் எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது .இந்த படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்க படுகிறது . கடைசியாக விஜயின் தெறி படம் 2016 தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது .
தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பாடகி மற்றும் நாடக நடிகையான சௌந்தர்யா பாலா இணைந்துள்ளார் .இவர் பல வெற்றி பாடல்களை பாடியுள்ளார் .இவரின் குரலுக்கென தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.

இவர் கபாலி படத்தில் கூட ரஜினி தனது மனைவியை தேடி கொண்டிருக்கும் காட்சிகளில் ,ஒரு பப்பில் 'இளையராஜா'வின் ஒரு பிரபல பாடலை பாடி கொண்டு இருப்பார் . இவர் கொடிவீரன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . தற்போது கூட விஜய் தொலைக்காட்சியின் 'பிக்பாஸ்' சீசன் 3ல் ஒரு சிறிய நேரம் வந்து பாடல் பாடிவிட்டு சென்றார். இவர் தற்போது விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் பகல் நிலவு என்ற நெடுந்தொடரில் நடித்து வருகிறார்.

தற்போது தளபதி 64 படத்தில் இணைந்ததன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ள சௌந்தர்யா பாலா தொலைக்காட்சி தொடரில் தன்னுடைய நடிப்பை பார்த்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னை அழைத்ததாகவும் ,லோகேஷ் அழைப்பே என்னை ஆச்சரியப்படுத்தியது எனவும் கூறினார் .இதையடுத்து படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியதை கேட்டு தான் ஆச்சரியம் அடைந்து போனதாகவும் கூறினார்.
தற்போது தளபதி 64 படத்தில் தளபதி விஜயுடன் மாளவிகா மோகனன் ,விஜய் சேதுபதி, சாந்தனு ,ஆன்டனி வர்கீஸ் ,ஆன்ட்ரியா,சஞ்சீவ்,ஶ்ரீநாத்,ரம்யா சுப்ரமணியன்,கௌரி கிஷான்,சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஒளிப்பதிவு சத்யன் சூர்யன் செய்து வருகிறார் .படத்தொகுப்பை பிலோமின் ராஜ் செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











