எம்மாடி ஆத்தாடி புகழ் .. சுசித்ராவுக்கு இன்று பிறந்தநாள் ..பிரபலங்கள் வாழ்த்து !

சென்னை : தமிழ் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி தனது காந்தக் குரலால் ரசிகர்களை இன்று வரை கட்டி இழுத்து வருபவர் பாடகி சுசித்ரா.

Recommended Video

Yashika Anand 21st Birthday Party • Aishwarya Dutta

ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த சுசித்ரா பாடகியாக பிரபலமானதை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தும் உள்ளார்.

இவ்வாறு திரைத்துறையில் பன்முகத் தோற்றத்தை கொண்டு ரசிகர்களால் இன்றுவரை மறக்க முடியாத பாடகியாக வலம் வரும் பாடகி சுசித்ரா ஆகஸ்ட் 14ஆம் தேதியான இன்று தனதுபிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தற்போது பாடகியாகவும்

தற்போது பாடகியாகவும்

சினிமா துறையில் தற்போது பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும் நடித்து நடித்து புகழ் பெற்று வரும் நிலையில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிக் கொண்டிருந்த பாடகி சுசித்ரா தற்போது பாடகியாகவும், நடிகையாகவும் வெற்றியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

என் போலவே காற்று

என் போலவே காற்று

தனது காந்தக் குரலால் பல்வேறு பாடல்களைப் பாடி ரசிகர்களை கட்டி இழுத்து வரும் சுசித்ரா லேசா லேசா திரைப்படத்தில் "என் போலவே காற்று" என்ற பாடலை சின்னக்குயில் சித்ரா உடன் இணைந்து பாடியதன் மூலம் பாடகியாக அறிமுகம் செய்யப்பட்டார் எனினும் ஜேஜே படத்தில் இவர் பாடிய "மே மாசம் 98" என்ற பாடல் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்ததோடு பல ரசிகர்களையும் பெற்றுத் தந்தது.

சிறந்த பாடகியாக

சிறந்த பாடகியாக

இவ்வாறு தனது ஆற்றல் மிகுந்த குரல் வளத்தால் சிறந்த பாடகியாக வலம் வந்த சுசித்ரா எம்மாடி ஆத்தாடி, குட்டி பிசாசே, கோரே கோரே உள்ளிட்ட பல தனித்துவமான பாடல்களின் மூலம் இன்றுவரை தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் சிறந்த பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மாணவர் அணியில்

மாணவர் அணியில்

பாடகியாகவும், ரேடியோ ஜாக்கியாகவும் வெற்றியுடன் வலம் வந்த சுசித்ரா இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் சூர்யாவுடன் மாணவர் அணியில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருந்தார்.

உயிரூட்டி உள்ளார்

உயிரூட்டி உள்ளார்

இவ்வாறு திரைத்துறையில் மிகப்பெரிய பங்காற்றி வரும் சுசித்ரா, மாளவிகா தமன்னா, ஸ்ரேயா சரண், ராய்லட்சுமி உள்ளிட்ட பல நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்து அந்த கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி உள்ளார்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

இவ்வாறு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த பாடகியாக பன்முகங்களைக் கொண்டு விளங்கி வரும் பாடகி சுசித்ரா ஆகஸ்ட் 14 ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் நண்பர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் கூறி மகிழ்வித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X