தமன்னா வாங்கி கொடுத்த துணியை எரிச்சாங்க.. ஜோதிகா நிஜத்தில் சந்திரமுகி.. சுசித்ரா சொன்ன ஷாக்நியூஸ்!
சென்னை: கங்குவா படம் குறித்து வரும் நெகட்டிவ் விமர்சனத்தை கண்டித்து நடிகை ஜோதிகா அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கை பேசுபொருளாகி இருக்கும் நிலையில், பாடகி சுசித்ரா, Behind Talkies யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், அறிக்கை உண்மையிலேயே ரசிகர்களை விட ஜோதிகா தான் சூர்யாவை விமர்சனம் செய்து இருக்கிறார். படத்தை யாரும், சூர்யாவை குறை சொல்லவில்லை. சூர்யாவை இப்படி செய்து விட்டீர்களே என்று ஆதங்கத்தில் பலரும் இயக்குனரை குற்றம் சொல்கிறார்கள். ஆனால் ஜோதிகா அவர்கள் தான், முதல் அரை மணி நேரம் படம் சரியில்லை என்று அவர்தான் சொல்லி இருக்கிறார். கருத்து தெரிவித்த பலரும் படம் நல்ல இல்ல, ஆனால் சூர்யா சூப்பரா நடிச்சு இருக்காருனுதான் சொல்லி இருக்காங்க. ஜோதிகா அதக்கூட சொல்லவில்லை. கணவன் மீது உண்மையான அன்பு இருக்கும் எந்த ஒரு மனைவியும் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட மாட்டார்கள். இப்படி இவங்க சொல்லுவதற்கு காரணம் நாங்க, தம்பதிகளாக பாலிவுட்டுக்கு வந்து இருக்கோம் வாய்ப்பு தாங்க என்பதுதான். இதனால், பாலிவுட் வாய்ப்பு போய்விடும் என்று ஜோதிகா பதறுகிறார்.

பாவம் சூர்யா: இது எல்லாத்துக்கும் காரணம் சூர்யா தான், அவர் ஜோதிகாவின் பேச்சை கேட்டுக்கொண்டு அனைத்தையும் செய்து வருகிறார். அவரை பாலிவுட்டில் பெரிய ஆளாக ஆக்குகிறேன் என்று தலை முடியை ஸ்னைட்டினிங் செய்ய வைத்து, மேக்கப் போட வைத்து சூர்யாவை பாடாய் படுத்துகிறார். சூர்யாவிற்கு இப்போது 50 வயதாகிவிட்டது. இப்போது போய் பாலிவுட்டில் ஆடிஷன் போக வேண்டுமா. சூர்யாவிற்கு எதற்கு பாலிவுட், ஜோதிகாவிற்கு நான்கு படம் இருக்கிறது. ஆனால் சூர்யாவிற்கு பாலிவுட்டில் ஒரு படம் கூட இல்லை.
மும்பையில் அப்படி என்ன படிப்பு: சூர்யாவை குடும்பத்தில் இருந்து பிரிச்சி மும்பைக்கு கூட்டிட்டு போனாங்க, அதுக்கு காரணம் குழந்தைகள் படிப்பு அப்படின்னு, இப்படினு ஏதோ சொன்னாங்க, ஜோதிகா சொன்ன பொய்யை சூர்யாவும் ஒத்துக்கிட்டு, குழந்தைகள் படிப்புக்காக மும்பை போனோம் என்று சொன்னாரு. தமிழ்நாட்டுல இல்லாத படிப்பா, மும்பையில இருக்கு. துபாய். சிங்கப்பூர் போகிறோம் என்று சொல்லி இருந்தா கூட பரவால்ல, ஆனால், படிப்பதற்காக மும்பைக்கு போனோம்னு, சொல்றத யாராலயும் ஏத்துக்க முடியாது. இந்த கேள்வியை எந்த மீடியாக்களுமே ஏன் கேட்கவில்லை. சென்னையில் இருக்கிற வரைக்கும் மாமனார்,மாமியாருனு இருந்தாங்க இப்போது, மும்பையில் ஜாலியா சுத்திக்கிட்டு இருக்காங்க.
கொளுத்திய ஜோதிகா: நான் உண்மையில சூர்யா ஒரு பாவப்பட்ட மனுஷன், ஜோதிகா நிஜத்துல சந்திரமுகி மாதிரி இருப்பாங்க. அவங்களுக்கு எந்த ஒரு நடிகையும் பிரண்ட் கிடையாது. அவங்க எல்லார் கிட்டையும் அப்படித்தான் திமிரா பேசுவாங்க. அதுக்கு ஒரு உதாரணத்தை சொல்றேன். அயன் படத்துல தமன்னாவும் சூர்யாவும் நடிச்சிட்டு இருந்தாங்க அப்போது, தமன்னா வெளிநாட்டிலிருந்து ஜோதிகா கிட்ட போனில் பேசினாங்க. அப்போ, நான் பசங்களுக்காக டிரஸ் வாங்கி இருக்கேன் நான் அனுப்பி வைக்கிறேனு சொன்னாங்க. அப்போ ஜோதிகா.. ஓ சூப்பர், சூப்பர், அனுப்புனு சொன்னாங்க. ஊர்ல இருந்து சூர்யா அந்த டிரஸ் கொண்டுவந்து கொடுத்ததும். அதை எடுத்துட்டு போய் கொளுத்திட்டாங்க. இப்படிப்பட்ட கேரக்டர் தான் ஜோதிகா என்று அந்த பேட்டியில் பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











