பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் திடீர் திருமணம்.. பிரபல நடிகையை மணந்தார்!

சென்னை: பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரான நடிகர் கார்த்திக் குமார் பிரபல நடிகையை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

ஆர்ஜே, டிவி தொகுப்பாளினி, நடிகை, பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. தனது திறமையால் சினிமா வட்டாரத்தில் பெரும் நட்பு வட்டாரத்தை கொண்டிருந்தார் சுசித்ரா.

பாடகி சுசித்ரா நடிகர் கார்த்திக்குமாரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் கார்த்திக்குமார் யாரடி நீ மோகினி, பொய் சொல்ல போறோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சுச்சி லீக்ஸ்

சுச்சி லீக்ஸ்

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தமிழ் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோக்கள், போட்டோக்கள் சுச்சி லீக்ஸ் என்ற தலைப்பில் வெளியானது. பல நடிகைகளின் பிரைவேட் போட்டோக்களும் சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியானது.

மனநிலை சரியில்லை

மனநிலை சரியில்லை

இதனால் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் பெரும் அதிர்ச்சி அடைந்தது. வீடியோக்களில் இருந்த பிரபலங்கள் பலரும் அதில் இருப்பது நான் இல்லை என மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தனது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து விட்டதாக கூறினார் சுசித்ரா. அவருக்கு மனநிலை சரியில்லை, சிகிச்சை பெற்று வருகிறார் என அவரது கணவர் கார்த்திக் குமார் விளக்கம் அளித்தார்.

பிக்பாஸ் 4ல் பங்கேற்பு

பிக்பாஸ் 4ல் பங்கேற்பு

ஆனால் அதன் பிறகு தனது சினிமா வட்டாரத்தில் இருந்து ஒதுக்கப்பட்டார் சுசித்ரா. இதனை தொடர்ந்து அவரது திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது. தீவிர மன அழுத்தத்தில் இருந்த சுசித்ரா, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில் கடந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் என்டரியாக பங்கேற்றார்.

முன்னாள் கணவர் திடீர் திருமணம்

முன்னாள் கணவர் திடீர் திருமணம்

இதில் சக போட்டியாளரான பாலாஜிக்கு ஆதரவாக இருந்து வந்தார். இதன் காரணமாக சொற்ப நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் சுசித்ரா. இந்நிலையில் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரான நடிகர் கார்த்திக் குமார் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

நடிகையுடன் திடீர் திருமணம்

நடிகையுடன் திடீர் திருமணம்

'மேயாத மான்', 'தேவ்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இளம் நடிகை அமிர்தா ஸ்ரீனிவாசன் என்பவரை கார்த்திக் குமார் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்துள்ளனர்.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

அவர்களின் திருமண வரவேற்பில் நடிகை வினோதினி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கார்த்திக் குமார் நடிகராக மட்டுமின்றி பிரபலமான ஸ்டாண்ட் அப் காமெடியன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X