சுசிலீக்ஸ் மாதிரியே.. புதிய அவதாரம் எடுத்த பாடகி சுசித்ரா.. பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல!
பாடகி சுசித்ரா சுசிகுக்ஸ் என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
Recommended Video
சென்னை: பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி மீண்டு வந்துள்ள பாடகி சுசித்ரா புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
தனது இனிமையான குரல் வளத்தால் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் பாடகி சுசித்ரா. 'மே மாசம் 98ல் மேஜர் ஆனேனே'.. 'டோலு டோலு தான் அடிக்கிறான்'.. உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.
கடந்த 2017ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல நடிகர், நடிகையரின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் பாடகி சுசித்ரா. தனுஷ், அனிருத், திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் அதில் சிக்கினர்.

சுசி லீக்ஸ் விபரீதம்
பின்னர் தனது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக கணவர் கார்த்திக்குமார் மூலம் அறிவித்தார் சுசி. இந்த சம்பவத்தை தொடர்ந்து வெளியில் தலைக்காட்டாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தார்.

காணவில்லை
சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை என கணவர் கார்த்திக்குமார் கூறினார். பிறகு கணவரை பிரிந்து, சென்னை அடையாறில் உள்ள தனது தங்கை சுஜிதாவின் வீட்டில் தந்கியிருந்த சுசித்ரா, சமீபத்தில் காணாமல் போய்விட்டதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதால், மீண்டும் செய்திகளில் அடிபட்டார்.

சுசித்ரா விளக்கம்
போலீசாரின் விசாரணையில், தியாகராய நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சுசித்ரா தங்கியிருந்தது தெரியவந்தது. தான் காணாமல் போகவில்லை என்றும், தங்கையுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சுசித்ரா போலீசாரிடம் தெரிவித்தார்.

புதிய அவதாரம்
இந்த சூழலில் தற்போது சுசித்ரா புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். பாடகியாகவும், ஆர்ஜேவாகவும், நடிகையாகவும் வலம் வந்த சுசித்ரா, தற்போது சமையல் கலைஞராக மாறியிருக்கிறார். இதற்காக சுசிகுக்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை அவர் தொடங்கியிருக்கிறார்.

சுசிகுக்ஸ் யூடியூப் சேனல்
சுசிகுக்ஸ் தமிழ் யூடியூப் சேனலில் பிரெஞ்சு உணவு வகைகளை சுசித்ரா செய்துகாட்ட உள்ளார். இதற்காக லண்டனில் பயிற்சி வகுப்பு ஒன்றில் சேர்ந்து கற்றுக்கொண்டதாகவும் சுசித்ரா தெரிவித்துள்ளார். எனினும் குக்கிங் சேனலுக்கு சுசிலீக்ஸ் போல், சுசிகுக்ஸ் என பெயர் வைத்திருப்பது பலரையும் அதிர வைத்துள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
மற்றொருபுறம் ரஞ்சித் என்பவருடன் சேர்ந்து, பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். அப்பாடலை அவர் விரைவில் வெளியிட உள்ளார். பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவித்துவந்த சுசித்ரா, அதில் இருந்து மீண்டு வந்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











