என்னை கொல்லப்போறாங்க.. நள்ளிரவில் அலறியடித்து ஓடிய சுச்சி.. பகீர் சம்பவம்.. பிக்பாஸுக்கு வருவாரா?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுசித்ரா பங்கேற்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அரங்கேறியுள்ள அதிர்ச்சிகரமான சம்பவத்தால் அவர் பங்கேற்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 4 ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. தொடங்கிய முதல் நாள் நாளே நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

சுரேஷ் சக்கரவர்த்தி, சனம் ஷெட்டி, அனிதா சம்பத், ரியோ என பலரும் போட்டி போட்டுக் கொண்டு கன்டென்ட் கொடுக்க தொடங்கி விட்டனர்.

வைல்ட் கார்டு

வைல்ட் கார்டு

இதனால் நாள் தோறும் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது பிக்பாஸ் சீசன் 4. இருந்த போதும் விஜே அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்தார்.

அனல் பறக்கும் பிக்பாஸ்

அனல் பறக்கும் பிக்பாஸ்

அவரும் தன் பங்குக்கு அதிகாரம் செலுத்த, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனல் பறந்தது. அர்ச்சனா போட்டியாளரா இல்லை தொகுப்பாளரா என்று சந்தேகம் வரும் அளவுக்கு நடந்து கொண்டார். இதனால் வறுத்தெடுத்தனர் நெட்டிசன்கள்.

குவாரண்டைன்

குவாரண்டைன்

இந்நிலையில் அண்மையில் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு என்ட்ரியாக பாடகி சுசித்ரா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சுசித்ரா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

டபுள் மீனிங்கில்

டபுள் மீனிங்கில்

சுசித்ராவின் வைல்ட் கார்டு என்ட்ரியை உறுதிப்படுத்திய நடிகை கஸ்தூரி, 60 கேமரா இருக்கு ஹவுஸ்மேட்ஸ் சோஷியல் டிஸ்டன்ஸ மெயின்டைன் பண்ணுங்க சுச்சி லீக்ஸை குறிப்பிட்டு டபுள் மீனிங்கில் டிவிட்டியிருந்தார். அதற்கு சுசித்ராவும் பதிலடி கொடுத்திருந்தார்.

கொல்லப் போறாங்க

கொல்லப் போறாங்க

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து என்னை யாரோ கொல்லப் போறாங்க என அலறியப்படியே வெளியே ஓடி வந்துள்ளார் சுசித்ரா. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் சுசித்ராவிடம் விசாரித்துள்ளனர்.

எதுவும் நடக்கவில்லை

எதுவும் நடக்கவில்லை

அப்போது தனது அறைக்கதவை யாரோ தட்டியதாக கூறி மிரண்டுள்ளார் சுசித்ரா. ஆனால் ஹோட்டல் ஊழியர்கள் அப்படி யாரும் வரவில்லை, எதுவும் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இருந்தபோதும் ரொம்பவே பயந்துபோய் இருந்துள்ளார் சுசித்ரா.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

பின்னர் நிகழ்ச்சிக் குழுவினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு மன நல மருத்துவரை வைத்து கவுன்சிலிங்கும் வழங்கியுள்ளனர். ஏற்கனவே ஒரு முறை தனது சகோதரியுடன் சண்டை போட்டு ஹோட்டலில் தங்கியிருந்த சுசித்ரா, அப்போதும் இதுபோன்று கத்தியதாகவும் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியானது.

Recommended Video

பிக்பாஸில் ஹவுஸ்மேட்ஸை பிரிக்க பார்க்கிறாரா அர்ச்சனா? | Top Five Beats - வீடியோ
பங்கேற்பாரா?

பங்கேற்பாரா?

இந்நிலையில் மீண்டும் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி மனம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்பதால், சுசித்ரா தற்போது இருக்கும் சூழலில் அவர் பிக்பாஸில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சுசித்ரா பிக்பாஸில் பங்கேற்கிறாரா இல்லையா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X