தனுஷை கோழி அமுக்குற மாதிரிதான் ஐஸ்வர்யா அமுக்குனாங்க.. சுசித்ரா பற்ற வைத்த புது நெருப்பு

சென்னை: தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் படம் வெளியானது. அவரே இயக்கிய அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக அவர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார். மேலும் இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் பின்னணி பாடகி தனுஷ் - ஐஸ்வர்யா குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்திருப்பவர் தனுஷ். அசுரன் படத்தில் அவரது நடிப்பை பார்த்து இயக்குநர் இமயம் பாரதிராஜா பாராட்டியிருக்கிறார். அதேபோல் அது ஒரு கனாக்காலம் படத்தை இயக்கிய போது தனுஷ் ஒரு சர்வதேச நடிகராக உயர்வார் என்று பாலுமகேந்திராவும் கூறினார். அவர் சொன்னதுபோலவே இப்போது ஹாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் தனுஷ். பெரும் கிண்டல்களை சந்தித்த தனுஷ்; இப்போது அடைந்திருக்கும் வளர்ச்சி மதிக்கத்தக்கது.

dhanush aishwarya suchitra

ராயன்: அவரது நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அவரது 50ஆவது படமாக வெளியான அதனை அவரே இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. முக்கியமாக படத்தின் ஸ்க்ரீன் ப்ளே படு மோசமாக இருந்ததாக பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். அடுத்ததாக அவரது கையில் குபேரா, இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்கள் இருக்கின்றன.

பிரிந்த தனுஷ்: இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தனுஷ். இரண்டு மகன்கள் இருக்கும் சூழலில் தனுஷும், ஐஸ்வர்யாவும் இப்போது பிரிந்து வாழ்ந்துவருகிறார்கள். இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாக ஒருபக்கமும், இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று மறுபக்கமும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அதேசமயம் கண்டிப்பாக இருவரும் சேர்வார்கள் என்று தனுஷின் நெருங்கிய வட்டாரம் கூறுகிறது.

சுசித்ரா பேட்டி: இந்நிலையில் பின்னணி பாடகி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனுஷ் - ஐஸ்வர்யா குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "தனுஷ் எனக்கு நெருங்கிய நண்பர். கார்த்திக்கை திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே தனுஷை எனக்கு தெரியும். ஒரு நடிகராக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். சிறந்த நடிகர் அவர். ராயன் படத்தில் எல்லாம் எவ்வளவு பவராக இருந்தார் தெரியுமா. நான் அவரை நிறைய முறை உரிமை எடுத்து திட்டியிருக்கிறேன்.

வேண்டாம் என்று சொன்னேன்: காதல் கொண்டேன் சமயத்தில் ஐஸ்வர்யா தனுஷுக்கு பொக்கே அனுப்பினார். அப்போது தனுஷ் என்னிடம் வந்து ரஜினி மகள் பொக்கே அனுப்பியிருக்கிறார். எனக்கு அவரை பிடித்திருக்கிறது. திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைப்பதாக சொன்னார். நானோ, லூசா நீ இதெல்லாம் அமிதாப் பச்சன் காலங்காலமாக செய்துவருகிறார். வளர்ந்து வரும் நடிகர்களை கோழி அமுக்குற மாதிரிதான் இது. திருமணம் எல்லாம் செய்துகொள்ளாதே என்று சொன்னேன். ஆனால் அவரோ ரஜினி பொக்கே அனுப்பியிருந்தால் நீ சொல்வது சரி; அவரது மகள்தானே அனுப்பியிருக்கிறார் என்று கூறினார். இல்லை திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று சொன்னேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X