ஜோதிகா அறிக்கையை கிழிக்க போறேன்.. சூர்யா நீ இவ்வளவு மக்கா.. வச்சு செய்த பாடகி சுசித்ரா!
சென்னை: சூர்யாவின் கங்குவதா திரைப்படம் தியேட்டரில் வெளியாகி பெரும் விமர்சனத்தை சந்தித்து வரும் நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜோதிகா , முதல் 1/2 மணிநேரம் ஒலி இரைச்சலாக இருந்தது என கருத்து தெரிவித்து இருந்தார். இந்த கருத்தால் கடுப்பான நடிகை சுசித்ரா, பாவம் சூர்யா இவ்வளவு மக்கா இருப்பாருனு நான் நினைச்சே பார்க்கவில்லை, ஜோதிகா Go back பாகிஸ்தானு ஹஸ்ட்டாக் போடாப்போகிறேன் என்று கருத்தை பதிவிட்டுள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் பெரும் பட்ஜெட்டில் இரண்டு ஆண்டுகள் பெரும் உழைப்புக்கு மத்தியில் வெளியானத் திரைப்படம் தான் கங்குவா. கடந்த வியாழக்கிழமை தியேட்டரில் வெளியான இந்த படம் வெளியாக முதல் நாளில் இருந்தே படம் குறித்து மிகவும் மோசமான விமர்சங்களை சந்தித்து வந்தன. சூர்யாவின் இரண்டு ஆண்டு உழைப்பு வீணாகிவிட்டது, சிறுத்தை சிவா, சூர்யாவை வெச்சு செய்துவிட்டார் என நெகட்டிவ் விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் பரவின.

ஜோதிகா அறிக்கை: இதுகுறித்து, சூர்யாவின் மனைவி ஜாேதிகா ஒரு காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், இந்த பதிவை சூர்யாவின் மனைவியாக இல்லை, ஒரு சினிமா ரசிகையா எழுதுகிறேன். நிச்சயமாக முதல் 1/2 மணிநேரம் ஒலி இரைச்சலாக இருக்கிறது. முதல் 1அரை மணி நேரம் மட்டும்தான் அப்படி இருக்கிறது மொத்த 3 மணி நேரமும் அப்படி இல்லை. கேமர வேலைபாடுகள் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காததாக இருந்தது. முதல் ஷோ முடிவதற்கு முன்பே முதல் நாள் கங்குவாவுக்கு இவ்வளவு எதிர்மறையை அவர்கள் தேர்ந்தெடுத்தது வருத்தமளிக்கிறது. கங்குவா டீம் பெருமையாக இருங்கள், எதிர்மறையாக கருத்து தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்கு வேறு எதையும் செய்யப்போவதில்லை என கருத்து தெரிவித்து இருந்தார்.
முட்டாள் தனமான பதிவு: ஜோதிகாவின் இந்த கருத்தால் கடுப்பான பாடகி சுசித்ரா, கங்குவா படத்தை பத்தி என்ன ஒரு பதிவை போட்டு இருக்கா ஜோதிகா, ஒரு முட்டாள் தனமான பதிவா இருக்கு, அந்தப் படத்தை மற்றவர்கள் விமர்சிப்பது போதாதுன்னு ஜோதிகாவே முதல் அரை மணி நேரம் மோசமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.கங்குவா படத்தை விமர்சித்தவர்கள் கூட இப்படி மோசமாக விமர்சனம் செய்து இருக்க மாட்டாங்க உண்மையில் நீங்க பொண்டாட்டி தானே,யாரு பக்கம் பேசுறீங்கனு தெரியலையே. சூர்யா ஒரு சிறந்த நடிகராக உறுதிப்படுத்திய திரைப்படம் பிதாமகன். கங்குவா திரைப்படம் தோல்வியடைந்து விட்டதால், சூர்யா ஒரு நல்ல ஆக்டர் இல்ல என்று சொல்லிவிட முடியுமா.
Go back பாகிஸ்தான்: ஜோதிகாவின் இந்த பதிவை பார்க்கும் போது தான் ஜோதிகாவுக்கு சுத்தமா படிப்பு அறிவே இல்ல என்பது தெரிகிறது. படிப்பு அறிவு இல்லாத கழுத இங்கிலீஷ் தெரியலனா வாய மூடிட்டு அமைதியாக இருக்க வேண்டியது தானே, இல்லை பிஆர்ஓவா எழுதிக்கொடுக்க சொன்ன எழுதி கொடுப்பாங்களே எதுக்கு இப்படி எழுதனும். ஜோதிகா எழுதிய அறிக்கையை கிழிச்சி Go back பாகிஸ்தானு ஹாஸ்டாக் போடப்போகிறேன் என்று நடிகை ஜோதிகாவை பாடகி சுசித்ரா கிழிகிழி என்று கிழித்து வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











