தனுஷ் ரொம்ப நல்லவர்.. கேடுகெட்ட நண்பர்கள் செய்த டார்ச்சர்..திடீரென அந்தர் பல்டி அடித்த சுசித்ரா!
சென்னை: தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வருகிறார் சுசித்ரா. இவர் நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், சுச்சி லீக்ஸ் பிரச்சனையால் இருவரும் பிரிந்தனர்.
2017ம் ஆண்டு பாடகி சுசித்ரா டிவிட்டர் கணக்கிலிருந்து நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களும் வீடியோக்களும் சரமாரியாக வெளியானது. இதனை ரசிகர்கள் சுச்சி லீக்ஸ் என கலாய்த்தனர். சுசித்ராவின் முதல் கணவரான நடிகர் கார்த்திக் குமார் அவருக்கு மனநல பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாக கூறி அவரை விவாகரத்து செய்தார்.

பாடகி சுசித்ரா: சுச்சி லீக்ஸ் பிரச்சனைக்கு பிறகு தலைகாட்டாமல் இருந்த சுசித்ரா மீண்டும் பேசி சில மாதங்களுக்கு முன் பேட்டி அளித்திருந்தார். அதில், சுச்சி லீக்ஸ் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது தனுஷ் மற்றும் கார்த்திக்குமார் சேர்ந்து செய்த வேலை இதில் நான் பலிகாடாகிவிட்டேன் என்றார். மேலும், முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் தனியாக அறையில் இருந்தார்கள் என்றும், எனது கணவர் ஓரினச் சேர்க்கையாளர் என்றும், பரபரப்பு தகவல்களை வெளியிட்டு இருந்தார்.
இனி பேசமாட்டேன்: இவர்கள் பற்றி மட்டுமில்லாமல் பலர் நடிகர் குறித்தும் பேசி இருந்தார். இதைத்தொடர்ந்து, நடிகர் கார்த்திக்குமார், சுசித்ராவின் பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து இனி கார்த்திக் குமார் குறித்து எதுவும் பேச மாட்டேன் என்றும், யாருக்கும் பேட்டி கொடுக்க மாட்டேன் என்றும் தனது யூடியூப் சேனலில் பேசி இருந்தார்.
கார்த்திக் குமார் தான் வில்லன்: இதைத்தொடர்ந்து மீண்டும், யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள பாடகி சுசித்ராவிடம், நீங்க தனுஷ் மீது குற்றச்சாட்டு வைத்தும், ராயன் படம் நன்றாக ஓடியதால், ரசிகர்கள் இதில் இருந்து தெரியுதா, சுசித்ரா சொன்னது பொய் என கருத்துக்களை பகிர்ந்து வருவது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுகித்ரா, நடிகர் தனுஷ் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு, அவரை எனக்கு பிடிக்கும். ஆனால், அவர் ஏன் கார்த்திக் குமாருடன் சேர்ந்து கேட்டுப்போனார் என்று தான் தெரியவில்லை.
சதி செய்த கார்த்திக் குமார்: தனுஷ் என் தம்பி மாதிரி, நாங்க நல்ல நண்பர்களாக இருந்தோம், சதி வேலை செய்து, நல்ல நட்பை கெடுத்துவிட்டது கார்த்திக் குமார் தான். அவன் தான் ரியல் வில்லன் அவனுடைய உண்மையான முகம் அனைவருக்கும் தெரிய வேண்டும். கார்த்திக் குமாரை கல்யாணம் செய்வதற்கு முன்பே, தனுசை எனக்கு தெரியும் அவனும் நானும் நல்ல நண்பர்கள். அவனை பலமுறை உரிமையோடு திட்டி இருக்கிறேன். ஐஸ்வர்யாவை கல்யாணம் செய்யப்போகிறேன் என்று சொன்ன போது, முதல் ஆளாக நான் தான் அதெல்லாம் வேண்டாம் என்று சொன்னேன். அப்படி நாங்கள் நெருக்கமான நண்பர்களாக இருந்தோம்.
கேடுகெட்ட நண்பர்கள்: தனுஷ் யாரையும் பழி தீர்க்கும் ஆள் கிடையாது, ஒரு நைட்டில் கேடு கெட்ட 20 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு அவனை அப்படி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் தனுஷ் அப்படி நடந்து கொண்டார். என்னைப்போல அவரும் பாதிக்கப்பட்டவர்தான். இப்போது அவரின் படம் வெற்றி அடைவதை பார்க்கும் போது உண்மையில் மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது என்று சுசித்ரா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











