படுக்கைக்கு வா என கட்டாயப்படுத்தினார்.. சுசித்ராவுக்கு நடந்த பாலியல் தொல்லை.. வெளியான ஷாக் நியூஸ்
சென்னை: பின்னணி பாடகி சுசித்ரா தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்ட அவர் பிறகு விவாகரத்து செய்து பிரிந்தார். அதற்கு காரணம் சுச்சி லீக்ஸ் என்று கூறப்படுகிறது. சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த 2016ஆம் ஆண்டு பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து சில வருடங்கள் அமைதியாக இருந்தார் சுசித்ரா. இந்தச் சூழலில் அவர் மீண்டும் பேட்டி அளிக்க ஆரம்பித்திருக்கிறார்.
ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக பணியாற்றியவர் சுசித்ரா. பிறகு சினிமாவில் பின்னணி பாடகியாக வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது குரலால் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் பாடல்களை பாடியிருக்கிறார். பின்னணி பாடகியாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் சினிமாவில் பல நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார் சுசித்ரா.

திருமணம்: தனது கரியர் பீக்கில் இருக்கும்போதே நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் வீட்டால் நிச்சயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேருக்குமான திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதற்கு முக்கிய காரணம் சுச்சி லீக்ஸ் என்று சொல்லப்படுகிறது.
சுச்சி லீக்ஸ்: கடந்த 2016ஆம் ஆண்டு கோலிவுட்டில் பெரும் புயல் அடித்தது. அதாவது சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வரிசையாக வெளியாகின. தனுஷும், திரிஷாவும் ஒன்றாக இருந்தது, நிக்கி கல்ரானி, அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பின. அந்தப் புகைப்படங்கள் ஒவ்வொரு நாளாக வெளியாகின. ஆனால் தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக சுசித்ரா கூறினார். மேலும் அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டதாக கார்த்திக் குமார் கூறினார்.
சுசித்ரா பேட்டி: நிலைமை இப்படி இருக்க அந்த விவகாரத்துக்கு பிறகு கார்த்திக்கும், சுசித்ராவும் பிரிந்துவிட்டார்கள். மேலும் சுசித்ரா ஆளே காணவில்லை. இந்தச் சூழலில் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சுச்சி லீக்ஸ் விவகாரத்துக்கு காரணமே தனுஷ், திரிஷா, கார்த்திக் குமார் உள்ளிட்டோர்தான். அதில் என்னை வேண்டுமென்றே மாட்டிவிட்டார்கள் என சொல்லி ஏகப்பட்ட தகவல்களை கூறினார். மேலும் தனது முன்னாள் கணவர் கார்த்தி தன் பாலின ஈர்ப்பாளர் என்றும்; அவரும் தனுஷும் ஒரே அறைக்குள் சென்றார்கள் என்றும் கூறியிருந்தார்.
அடுத்த பேட்டி: சில மாதங்களுக்கு முன்பு சுசித்ரா அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் இப்போது மீண்டும் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "நான் பெங்களூரில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு பாஸ் ஒருவர் இருந்தார். அவருக்கு நாளை திருமணம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இன்று பேச்சிலர் பார்ட்டி கொண்டாடினார்கள்.
ரூமில் நடந்த விஷயம்: அவர் முழு போதையில் இருந்தார். அப்போது எனது கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு வா அரை மணி நேரம் வா என்று கூறினார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சரி பாத்ரூம் சென்றுவருகிறேன் விடுங்கள் என்று கூறிய பிறகு கையை விட்டார். உடனே நான் அங்கிருந்து வெளியேறி நள்ளிரவில் நடந்தே வீட்டுக்கு வந்துவிட்டேன். அதை என்னால் மறக்கவே முடியாது" என்றார்.


Click it and Unblock the Notifications











