விஜய், தனுஷ் மட்டுமில்லை.. ஷாருக்கானையும் சீண்டிய சுசித்ரா.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!
சென்னை: சுச்சி லீக்ஸ் பல பிரபலங்களின் ரகசிய லீலைகளை போட்டு உடைத்து சமூக வலைதளங்களில் பேசப்பட்டு ஆள் அடையாளமே இல்லாமல் காணாமல் போன, பாடகி சுசித்ரா பல நடிகர்கள் குறித்து பேசியது பேசுபொருளான நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் குறித்து பேசியது இணையத்தில் புயலை கிளப்பி உள்ளது.
ரேடியோ ஜாக்கியாக பிரபலமான பாடகி சுசித்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பாடல்கள் பாடி இருக்கிறார். இவர், சுச்சி லீக்சில் தனுஷ், திரிஷா, அனுயா, அனிருத், அண்ட்ரியா, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, நயன்தாரா, சிம்பு இப்படி பல பிரபலங்களின் அந்தரங்க லீலைகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சினிமாவில் பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து, கணவர் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து லண்டனில் செட்டில் ஆனார்.

புயலை கிளப்பிய சுசித்ரா: பல ஆண்டுகள் ஓய்ந்து இருந்த சுச்சி லீக்ஸ் விவகாரத்தை,பாடகி சுசித்ரா, யூடியூப் சேனல்களில் சுச்சி லீக்ஸ் விவகாரம் குறித்தும், தனுஷ் ஐஸ்வர்யாவை குறித்து பல ரகசிய விஷயங்களை அவர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு தெரிந்தே பல நடிகைகளுடன் உறவில் இருந்து வந்தார். ஐஸ்வர்யாவுக்கு தெரிந்தே தனுஷ் துரோகம் செய்து இருக்கிறார், அதேபோல் ஐஸ்வர்யாவும் தனுஷுக்கு சளைத்தவர் அல்ல அவரும் துரோகம் செய்து இருக்கிறார்.
இவர்கள் தான் காரணம்: மேலும், எனது முன்னாள் கணவர் ஒரு Gay, இதை நான் திருமணமான இரண்டே வருஷத்தில் கண்டுப்பிடித்துவிட்டேன். அப்போதில் இருந்து நான் அவரிடம் விவாகரத்து கேட்டு வந்தேன். அதே போல யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு, நடிகர் தனுஷ் மற்றும் எனது முன்னாள் கணவரான கார்த்திக் குமாரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள். அவர்கள் இரண்டு பேரும் தனியாக ஒரு அறையில் இருந்தார்கள் அப்படி அங்கே என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை என்றார். அவர்கள் இருவர் தான் என் வாழ்க்கை நாசமாக காரணம் என்று பேசி இருந்தார்.
எல்லாமே டேர் தான்: இது இணையத்தில் பெரும் புயலை கிளப்பிய நிலையில்,மற்றொரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சுசித்ரா, ஒரு பார்ட்டியின்போது திரிஷா விஜய் வீட்டு முன் நின்று பாடல் பாடி நடனம் ஆடியது ஒரு டேர், திரிஷாவிடம் எந்த மாதிரியான டேர் கொடுத்தாலும் அவர் பண்ணிவிடுவார். இந்த மாதிரியான பார்ட்டி பல காலமாக நடந்து வந்திருக்கிறது என்று பேசிய சுசித்ரா, என் முன்னாள் கணவர் ஒரு Gay அதை நான் கண்டுபிடித்தது தான் பிரச்சனை என்றார்.
ஷாருக்கானுமா: மேலும், எனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், லண்டனில் ஷாருக்கான் மற்றும் கரண்ஜோஹர் ஆகியோர் லண்டனில் ஓரினச்சேர்க்கையாளர்களை சந்தித்துள்ளனர்., இவர்கள் இருவரும், ஓரினச்சேர்க்கையாளர்களின் சந்திப்பு சட்டப்பூர்வமாக இருக்கும் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று, அவர்கள் போலவே உடை அணிந்து கொண்டு விடுமுறையை அவர்களுடன் ஜாலியாக கொண்டாடுவார்கள். இது ஷாருக்கான் அடிக்கடி செய்யும் வேலை என்று என்று கூறியுள்ளார். கோலிவுட் நடிகர்களான தனுஷ்,விஜய்,சிம்பு, த்ரிஷா நடிகர்களை சீண்டியது மட்டுமில்லாமல், பாலிவுட் சூப்பர் ஸ்டாரையும் சுசித்ரா வம்புக்கு இழுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











