மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய ‘சுசிலீக்ஸ்’ சுசித்ரா.. இம்முறை சொந்தக் குடும்பத்தினர் மீதே புகார்!
தான் காணாமல் போகவில்லை என பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தன்னிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்க தனது தங்கை முயற்சிப்பதாக பாடசி சுசித்ரா மீண்டும் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.
சுசி லீக்ஸ்.. இந்த பேரக் கேட்டாலே தமிழ் திரையுலகமே சும்மா அதிருமுல்ல.. இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன சுசி லீக்ஸ் பரபரப்புகள் முடிவுக்கு வந்து.. ஆனாலும் அந்த பாதிப்பு இன்றும் பலரை பின்தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
2017ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல நடிகர், நடிகையரின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் பாடகி சுசித்ரா. பின்னர் தனது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக கணவர் கார்த்திக்குமார் மூலம் அறிவித்தார் சுசி.
பாடகி சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை என கணவர் கார்த்திக்குமார் கூறினார். பிறகு கணவரை பிரிந்து, சென்னை அடையாறில் உள்ள தனது தங்கை சுஜிதாவின் வீட்டில் தஞ்சமடைந்தார் சுசித்ரா. இரண்டு ஆண்டுகளாக அங்கு தான் அவர் தங்கியுள்ளார்.

சுசித்ராவை காணவில்லை
இந்நிலையில் கடந்த 11ம் தேதி சுசித்ராவை காணவில்லை என அடையாறு காவல் நிலையத்தில் சுஜிதா புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், தியாகராய நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சுசித்ரா தங்கியிருந்தது தெரியவந்தது.

சுசியின் விளக்கம்
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சுசித்ராவிடம் விசாரித்தனர். அப்போது, தான் காணாமல் போகவில்லை என்றும், தங்கையுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சுசித்ரா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து
மேலும் தன்னிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்க தனது தங்கை முயற்சிப்பதாகவும், அதற்காகவே தன்னை அவர் தேடுவதாகவும் சுசித்ரா கூறியுள்ளார். குடும்பத்தினர் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடத்துவதால் தான், வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக சுசித்ரா தெரிவித்துள்ளார்.

சிகிச்சை எடுக்கிறேன்
இருப்பினும் காவல்துறையினர் அறிவுறுத்தியதால் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும் சிசுத்ரா கூறியுள்ளார். இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











