இதில் வயசு வித்தியாசம் இல்ல.. கையை பிடித்து இழுத்தான்..எண்டே இல்லாமல் சர்ச்சையை கிளப்பிய சுசித்ரா!
சென்னை: சர்ச்சைக்கு பெயர் போன பாடகி சுசித்ரா எண்டே இல்லாமல் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து பேசிய அவர், சினிமா மட்டுமில்லாமல், பெண்களை படுக்கைக்கு அழைப்பதும் பல இடங்களிலும் நடக்கிறது. இது போன்றே ஒரு மோசமான சம்பவம் என் வாழ்க்கையில் நடந்தது என்று பேட்டியில் ஓபனாக பேசியுள்ளார்.
பல ஹிட் பாடல்களை பாடிய சுசித்ரா, 2017 ஆம் ஆண்டு, "சுச்சி லீக்ஸ்" என்ற தலைப்பில் நடிகர் தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா, அனிருத், நடிகை அமலா பால் என பலரது சர்ச்சைக்குரிய போட்டோக்களை வெளியிட்டு தமிழ் சினிமாவை ஆட்டம் காணவைத்தார். சில ஆண்டுகள் இதுபற்றி மோசாமல் இருந்த சுசித்ரா, சமீபத்தில் அளித்த பேட்டியில், "சுச்சி லீக்ஸ்" விஷயத்தில், என் அக்கவுண்டை பயன்படுத்தி கார்த்திக் குமார் தான் அவ்வாறு செய்தார் என்றும். தனுஷ், கார்த்திக் குமார், த்ரிஷா, விஜய், அஜித்,கமல் என பலர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு இருந்தார்.

மீண்டும் சலசலப்பு: சுசித்ரா மீண்டும் பேசியது மீண்டும் தமிழ் சினிமாவில் பற்றிக்கொண்டு எரிந்ததை அடுத்து, இனிமேல் நான் யாருக்கும் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். தற்போது, ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி சினிமாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மீண்டும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சுசித்ரா, பல அதிரடியான விஷயத்தை கூறி மீண்டும் தலையை சுற்ற வைத்துள்ளார்.
அசிங்கமான செயல்: அதில், நடிகை சௌமியா, தமிழ் இயக்குநரால், பாலியல் ரீதியாக அனுபவித்த கொடுமை குறித்து இப்போது பேசி இருப்பது வெஸ்ட், இதனால் எந்த பயனும் இல்லை. இதுநடக்கும் போதே இந்த படமே வேண்டாம் என்று அவள் போய் இருக்க வேண்டும். இந்த இயக்குநர் பல அசிங்கமான செயல்களை செய்ய சொல்லி இருக்கிறார். ஆனால், எதையெல்லாம் , அந்த பெண் எப்படி காதல் என்று நினைத்தாள் என்று எனக்கு தெரியவில்லை.
அப்போது சௌமியாவிற்கு 18 வயது ஆகிவிட்டது, அவள் சம்மதத்தோடுத்தான் அனைத்துமே நடந்து இருக்கிறது. இதையெல்லாம் அப்போதே போலீசில் புகார் கொடுத்து இருந்தால் நிச்சயம் ஏதோ நடந்து இருக்கும். ஆனால், இத்தனை வருஷம் கழித்து சொல்வதால் எதுவும் நடக்கப்போவதில்லை. போலீஸ் யாரை போய் என்ன வென்று விசாரிப்பார்கள். இந்த புகாரை சௌமியா முன்பே கொடுத்து இருந்தால், அவரை போன்று அடுத்து வேறு யாரும் பாதிக்கப்படாமல் இருந்து இருப்பார்கள்.
கையை புடிச்சி இழுத்தான்: பெண்களை படுக்கைக்கு அழைப்பது சினிமாவில் மட்டும் இல்லை, அனைத்து துறையிலும் இருக்கு, நான் ஐடியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன் அப்போது ஒருத்தன் என்னை எப்போதும், தவறாக பார்ப்பான். ஒரு நாள் பர்த் டே பார்ட்டி என்று வீட்டுக்கு அழைத்தான். மொத்த ஆபிசும் போனதால், நானும் வேறு வழியில்லாமல் சென்றேன். அப்போது, அவன் நன்றாக குடித்துவிட்டு, என் கைகை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயற்சி செய்தான். அந்த நேரத்தில், நானும் சரி வா என்று அவனை படுக்கை அறைக்கு அழைத்து சென்று உட்காரவைத்துவிட்டு, இதேவரேன் என்று சொல்லிவிட்டு அந்த அறையை வெளிபக்கமாக பூட்டிவிட்டு, ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்துவிட்டேன்.
படித்த பெண்களை பிடிக்கும்: இனிமேல் அந்த ஆபிசில் வேலை செய்ய முடியாது, வேலை இல்லை இருக்காது என்று தெரியும். இதனால், ரிசைன் செய்துவிட்டு, சென்னை வந்துவிட்டேன். இப்படித்தான் பல இடத்தில் ஆண்கள் இருக்கிறார்கள். அதுவும் படித்த பெண்கள் என்றால், ஆண்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களை கட்டில் அடக்கிபார்ப்பது, அவர்களுக்கு ஒரு த்ரில் என்று பாடகி சுசித்ரா பலவற்றை ஓபனாக பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











