வனிதா தாக்கப்பட்டது உண்மையா? பல தலைகள் உருளுகிறது.. சுசித்ரா என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: வனிதா விஜயகுமார் தாக்கப்பட்ட விஷயத்தில் உண்மை என்ன என்று யாருக்கும் தெரியவில்லை என்று பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார். தனது மகளுக்கு ஆதரவாக வனிதா தொடர்ந்து சோஷியல் மீடியாவில் பேசி உள்ளார்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து, தனியார் யூடியூப் தளங்களில் பேசி வருகிறார்.
வனிதா மீது தாக்குதல்: நடிகை வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் நள்ளிரவு ஒரு மணி அளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு தனது காரை எடுக்க சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர் ரெட் கார்டு கொடுக்குறீங்களா? என்று கேட்டு தன்னை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியதாகவும், அந்த மர்ம நபரின் சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் வனிதா கூறி, தாக்கப்பட்ட போட்டோவை பதிவிட்டு இருந்தார்.
ஏன் புகார் கொடுக்கல: இதுகுறித்து, வீடியோ ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், நள்ளிரவில் பிரதீப்பின் ஆதரவாளர்கள் தாக்கிவிட்டதாக வனிதா கூறி இருக்கிறார். கண் வீங்கும் அளவிற்கு ஒருவர் தாக்கி இருக்கும் போது அதுகுறித்து வனிதா ஏன் போலீசில் புகார் கொடுக்கவில்லை. ஆனால், விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் இருந்து போன் செய்த போது அவரின் போன் ஸ்விட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தாக்கப்பட்டது உண்மையா: இந்நிலையில், இதுகுறித்து பேசிய பாடகி சுசித்ரா, வனிதா தாக்கப்பட்ட விஷயத்தில் பல தலைகள் உருளுகிறது, பலரின் மீது சந்தேகம் வருகிறது. காவல்துறையோ எல்லா வேலையையும் விட்டு இந்த வேலையில் முழுவீச்சில் இருக்கிறார்கள். வனிதா விஜயகுமார் தாக்கப்பட்டது உண்மையா என கேட்டு பலர் அவருக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், அவர் இப்போது எங்கே இருக்கிறார், என்ன ஆச்சு என்று யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இதனால், வனிதா இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த பேட்டியில் சுசித்ரா பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











