Ajithkumar: சுச்சி லீக்ஸ் பிரச்னைக்குப் பின்னர் அஜித் மட்டும்தான் ஃபோன் பண்ணி பேசுனாரு - சுசித்ரா!
சென்னை: தமிழ் சினிமாவில் கிசு கிசு பேசுபவர்கள் பலர் இருந்தாலும், கிசுகிசு பேசுவேன், என்னால் கிசுசிசு பேசாமல் இருக்க முடியாது என தான் நடத்தி வரும் யூட்யூப் சேனலில் நேரடியாகவே கூறியவர் பின்னணி பாடகி சுசித்ரா. இவர் தனது யூட்யூப் சேனலில் எது பேசினாலும் அது சர்ச்சையாகத்தான் இருக்கும். இவர் பேசும் விஷயங்களை நம்பலாமா வேண்டாமா என பார்ப்போரை யோசிக்க வைக்கும் அளவிற்கு அவர் பேசும் கிசுகிசுக்கள் இருக்கும். இப்படியான நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
சுசித்ரா பின்னணி பாடகியாக உருவாவதற்கு முன்னர் தொடக்கத்தில் தனியார் வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றினார். அங்கு அவரது நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவானது. இவரது கணீர் குரல் அவரை பாடகியாக மாற்றியது. தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சில ஏற்ற இறங்கங்களால் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கின்றார். அதாவது சினிமாவில் பாடல்கள் பாடுவதில் இருந்து விலகி இருகின்றார். ஆனால் சுசித்ரா பாடகியாக மட்டும் அறியப்பட்டவர் இல்லை. சுச்சி லீக்ஸ் என தமிழ் சினிமா ரசிகர்களை மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவரும் இவர்தான். நடிகர் நடிகைகளின் இரவு நேர பார்ட்டிகளில் அவர்கள் எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படங்களை இணையத்தில் இவரது பெயரில் வெளியானது.

கார்த்திக் குமார்: அதன் பின்னர் மெல்ல மெல்ல சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டாரா அல்லது ஒதுங்கிக்கொண்டாரா என யோசிக்க வைக்கும் அளவிற்கு அவரது சினிமா வாழ்க்கை அமைந்துள்ளது என பலர் பேசி வருகின்றனர். ஆனாலும் சினிமாவில் திரை மறைவில் நடக்கும் பல விஷயங்களை தனது யூட்யூப் சேனல் மூலம் வெளிக்கொண்டு வருபவராக உள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.குறிப்பாக சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் வெளியானவை அனைத்தும் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாரால் வெளியிடப்பட்டது எனக் கூறினார்.

சுச்சி லீக்ஸ்: மேலும், சுச்சி லீக்ஸ் சமயத்தில் நான் கூறுவதை யாருமே நம்பவில்லை. இப்போதுகூட தமிழ்நாடு என்னை மனநிலை சரியில்லாதவர் என நினைத்துக் கொண்டு உள்ளது. ஆனால் நான் அது குறித்து எல்லாம் கவலைப் படவில்லை. நீங்களே கூறுங்கள், எனது திரைவாழ்க்கையில் நான் உச்சத்தில் இருக்கும் காலகட்டம் அது. அப்படி இருக்கும்போது நான் எனது திரை வாழ்க்கை இதனால் மொத்தமாக வீணாகப் போகும் எனத் தெரிந்தும், நான் இந்த வேலையைச் செய்திருப்பேனா? அப்படியானால் இன்றைக்கு ஹேமா கமிட்டி விவகாரம் தொடர்பாக பலரும் பலவிதமாக பேசுகின்றார்கள். ஆனால் நான் அப்படி எதுவும் இப்போது கூட கூறவில்லையே.

அஜித்: அந்த பிரச்னைகள் அனைத்தும் ஓய்ந்த பின்னர் ஒரு ஆண்டுக்குப் பிறகு நடிகர் அஜித் மட்டும் எனக்கு போன் செய்து என்ன செய்து கொண்டு இருக்கின்றாய் எனக் கேட்டார். படத்தில் நடிக்கின்றாயா எனக் கேட்டார். அதன் பின்னர் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கின்றாயா எனக் கேட்டார் எனக் கூறியுள்ளார். சுசித்ராவின் இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











