Suchitra: தனுஷை பிட்டு பட ஹீரோனு சொன்னவங்களை செருப்பால அடிக்கனும் - சுசித்ரா பளீச்
சென்னை: தமிழ் சினிமாவில் கிசு கிசு பேசுபவர்கள் பலர் இருந்தாலும், கிசுகிசு பேசுவேன், என்னால் கிசுசிசு பேசாமல் இருக்க முடியாது என தான் நடத்தி வரும் யூட்யூப் சேனலில் நேரடியாகவே கூறியவர் பின்னணி பாடகி சுசித்ரா. இவர் தனது யூட்யூப் சேனலில் எது பேசினாலும் அது சர்ச்சையாகத்தான் இருக்கும். இவர் பேசும் விஷயங்களை நம்பலாமா வேண்டாமா என பார்ப்போரை யோசிக்க வைக்கும் அளவிற்கு அவர் பேசும் கிசுகிசுக்கள் இருக்கும். இப்படியான நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர் தனுஷை தான் எப்போது சந்தித்தேன் என்பது குறித்து கூறியுள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
சுசித்ரா பின்னணி பாடகியாக உருவாவதற்கு முன்னர் தொடக்கத்தில் தனியார் வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றினார். அங்கு அவரது நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவானது. இவரது கணீர் குரல் அவரை பாடகியாக மாற்றியது. தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சில ஏற்ற இறங்கங்களால் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கின்றார். அதாவது சினிமாவில் பாடல்கள் பாடுவதில் இருந்து விலகி இருகின்றார். ஆனால் சுசித்ரா பாடகியாக மட்டும் அறியப்பட்டவர் இல்லை. சுச்சி லீக்ஸ் என தமிழ் சினிமா ரசிகர்களை மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவரும் இவர்தான். நடிகர் நடிகைகளின் இரவு நேர பார்ட்டிகளில் அவர்கள் எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் இவரது பெயரில் வெளியானது.

அதன் பின்னர் மெல்ல மெல்ல சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டாரா அல்லது ஒதுங்கிக்கொண்டாரா என யோசிக்க வைக்கும் அளவிற்கு அவரது சினிமா வாழ்க்கை அமைந்துள்ளது என பலர் பேசி வருகின்றனர். ஆனாலும் சினிமாவில் திரை மறைவில் நடக்கும் பல விஷயங்களை தனது யூட்யூப் சேனல் மூலம் வெளிக்கொண்டு வருபவராக உள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சுச்சி லீக்ஸ்: அதில் தொகுப்பாளர், நீங்கள் ஏன் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து புகைப்படங்களை வெளியிட்டீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அதனை நான் செய்யவில்லை என சத்தியம் செய்தார். மேலும் அதனை தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தான் செய்தார் எனக் கூறினார். இந்தத் தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆபாச படம்: மேலும் தனுஷ் தொடர்பான கேள்விக்கு, காதல் கொண்டேன் படம் ரிலீஸ் ஆன காலகட்டம். அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மாவிற்கு திரைத்துறை சார்பில் விழா நடத்தப்பட்டது. அப்போது தமிழ் தாய் வாழ்த்து பாட, மற்ற பின்னணி பாடகர்களைப் போல் நானும் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் வந்திருந்த பின்னணி பாடகர்கள், சற்று தொலைவில் அமர்ந்திருந்த தனுஷைப் பார்த்து, காதல் கொண்டேன் என்ற பார்ன் (ஆபாச படம்) படத்தில் நடித்த பையன் அங்கு அமர்ந்திருக்கின்றான் எனக் கூறினார்கள்.

செருப்பால் அடிக்கணும்: உடனே இடைமறித்த தொகுப்பாளர், அனைவரையும் செருப்பால் அடிக்கவேண்டும் எனக் கூறினார். அதாவது யாரெல்லாம் தனுஷை ஆபாச பட ஹீரோ எனக் கூறினார்களோ அவர்களை செருப்பால் அடிக்கவேண்டும் எனக் கூறினார். உடனே, பாடகி சுசித்ராவும் 'சத்தியமாக' எனக் கூறிவிட்டு தொடர்ந்து பேசினார். பின்னணி பாடகிகள் அவ்வாறு கூறியதும், ' இது நல்ல செயல் அல்ல' எனக் கூறிவிட்டு தனுஷுடன் சுமார் 30 நிமிடங்கள் அமர்ந்து பேசிவிட்டு வந்தேன். இதனை நினைவில் வைத்திருந்த தனுஷ் என்னை அவரது படத்தில் பாட வைத்தார். வேங்கை படத்தில் 'உன்ன மட்டும் பிடிக்குது' என்ற பாடலைப் பாடினேன். நாங்கள் இருவரும் நல்ல தோழர்களாக இருந்து வந்தோம். ஆனால், ஒரு சிலரால் எங்கள் தோழமையில் விரிசல் வந்தது. அதனைப் பயன்படுத்தி எங்களை பிரித்தே விட்டார்கள் எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications











