மிஸ்டர் கிளீன் நடிகர்கள் விஜய் -சூர்யா தான்.. பாடகி சுசித்ரா கருத்தை ஓட்டிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: பாடகி சுசித்ரா பாடகியாக மட்டுமில்லாமல் ரேடியோ ஜாக்கியாகவும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தவர். பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ள சுசித்ரா ஒரு கட்டத்தில் சுச்சி லீக்ஸ் மூலம் நடிகர், நடிகைகளின் அந்தரங்கங்களை வெளிப்படுத்தினார். இதனால் இவருக்கு பாடும் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சில காலங்கள் ஓய்ந்திருந்தார் சுசித்ரா.
இந்நிலையில் தற்போது மீண்டும் நடிகர், நடிகைகளின் அந்தரங்கங்களை வெளிப்படுத்தி வருகிறார். இதனிடையே கோலிவுட்டில் மிஸ்டர் கிளீன் நடிகர்கள் என்று சூர்யா மற்றும் விஜய்யை பாராட்டி பேசி உள்ளார் சுசித்ரா. சுசித்ராவின் அடுத்தடுத்த யூடியூப் பேட்டிகள் பலரையும் அவருக்கு எதிராக பேச வைத்து வருகிறது.

பாடகி சுசித்ரா: சினிமாவில் நடிகர். நடிகைகளின் அந்தரங்கம் குறித்த பல விஷயங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் பாடகி சுசித்ரா/ பாடகியாக மட்டுமல்லாமல் ரேடியோ ஜாக்கியாகவும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த இவர் சுச்சி லீக்ஸ் மூலம் நடிகர், நடிகைகளின் அந்தரங்களை வெளியிட்டு அதன் மூலம் பாடும் வாய்ப்புகளை இழந்தார். இந்நிலையில் சிறிது காலங்கள் ஓய்ந்திருந்த சுசித்ரா, தற்போது மீண்டும் youtube சேனல்களுக்கு நடிகர், நடிகைகளின் அந்தரங்கம் குறித்து பேட்டிகளை கொடுத்து வருகிறார். இதனால் பல்வேறு தரப்பினரும் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மிஸ்டர் கிளீர் நடிகர்கள்: அடுத்தடுத்து பல விஷயங்களை பேசி வரும் சுசித்ரா, தற்போது கோலிவுட்டில் மிஸ்டர் கிளீன் நடிகர்கள் என்று நடிகர் சூர்யா மற்றும் விஜய்யை குறிப்பிட்டு பேசியுள்ளார். அவர்கள் இருவரும் தங்களை யாரும் தொட விடாமல் தங்களின் கர்ப்பை காப்பாற்றிக் கொள்ள மிகவும் கஷ்டப்பட்டவங்க என்று சுசித்ரா குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக விஜய் வீட்டில் பார்ட்டி நடந்தால்கூட தனியாகத்தான் நிற்பார் என்று சுசித்ரா தெரிவித்துள்ளார் என்று பாடகி சுசித்ரா கூறியுள்ளார். இந்நிலையில் சுசித்ராவின் இந்த கருத்தை கலாய்க்கும்வகையில் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் பதிலுள்ளார்.
சர்ச்சை கருத்துக்கள்: பாடகி சுசித்ரா தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறக்காமல் மௌனம் சாதித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் கருத்தை வெளியிட்டால் சுசித்ராவின் கருத்திற்கு விளக்கம் அளிப்பதாக மாறிவிடும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் மலையாள இளம் நடிகை ரீமா கல்லிங்கல் மீதும் சுசித்ரா பகிரங்க குற்றச்சாட்டை வைத்திருந்தார். அவர் இளம் பெண்களுக்கு போதை விருந்து வைத்ததாக குற்றம் சாட்டியிருந்தார் சுசித்ரா.
ரீமா கல்லிங்கல் புகார்: இந்நிலையில் சுசித்ரா மீது ஹேமா கமிட்டியில் ரீமா கல்லிங்கல் புகார் அளித்துள்ளார். தன்னுடைய வீட்டில் அத்தகைய எந்த பார்ட்டியும் தான் வைக்கவில்லை என்றும், தன்னுடைய நற்பெயருக்கு சுசித்ரா களங்கம் விளைவிப்பதாகவும் ரீமா கல்லிங்கல் புகார் அளித்துள்ளார். அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தவும் ரீமா கல்லிங்கள் கேட்டுக் கொண்டுள்ளார். சுசித்ராவின் புகார் பட்டியலில் பல முன்னணி நடிகர்கள் உள்ள நிலையில் அவர்கள் யாரும் இந்த விஷயத்தில் வாய் திறக்காமல் உள்ள நிலையில் ரீமா கல்லிங்கல் ஹேமா கமிட்டியிலேயே சுசித்ரா மீது புகார் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











