ஜெயம் ரவி ஆர்த்தி கூட இத்தனை வருஷம் வாழ்ந்ததே பெருசு.. பாடகி சுசித்ரா போட்ட குண்டு!
சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவிற்கு போதாத காலம் என்று தான் சொல்லவேண்டும். தொடர்ந்து கோலிவுடில் பிரபலமான ஜோடிகள் விவாகரத்தை அறிவித்து பிரிந்து வருகின்றனர். சமந்தா, நாக சைதன்யா, தனுஷ், ஐஸ்வர்யாவை தொடர்ந்து அண்மையில் ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்தை அறிவித்த நிலையில் தற்போது விவாகரத்து சர்ச்சையில் ஜெயம் ரவி பெயர் அடிபட்டு வருகிறது. இதுகுறித்து பாடகி சுசித்ரா தனது யூடியூப் தளத்தில் பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவிற்கு போதாத காலம் என்று தான் சொல்லவேண்டும். தொடர்ந்து கோலிவுடில் பிரபலமான ஜோடிகள் விவாகரத்தை அறிவித்து பிரிந்து வருகின்றனர். சமந்தா, நாக சைதன்யா, தனுஷ், ஐஸ்வர்யாவை அண்மையில் ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்தை அறிவித்த நிலையில் தற்போது விவாகரத்து சர்ச்சையில் ஜெயம் ரவி பெயர் அடிபட்டு வருகிறது. இதுகுறித்து பாடகி சுசித்ரா தனது யூடியூப் தளத்தில் பேசி உள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் இவருடைய மூத்த மகன் ஆரவ் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'டிக் டிக் டிக்' படத்தில் அவரின் மகனாக நடித்திருந்தார்.

விவாகரத்து சர்ச்சை: ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதியினர் சினிமாவில் க்யூட்டான ஜோடியாகவே இருந்தனர். தீபாவளி பொங்கல் என எந்த விழாவாக இருந்தாலும், அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து எடுத்த போட்டோவை பகிர்வதை வழக்கமாக வைத்திருந்தனர். அண்மையில் ஒரு பேட்டியில் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தி குறித்து பெருமையாக பேசி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ஜெயம் ரவி- ஆர்த்தி இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவியது.
மாமியார் காரணமா? பலரும் இந்த தகவலை வெறும் வதந்தி என கூறிவந்த நிலையில், இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆர்த்தி பயோவில் இருக்கும் ஜெயம் ரவியின் ஐடியை நீக்கி இருக்கிறார். அதேபோல், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ஜெயம் ரவியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இன்னொரு பக்கம், ஜெயம் ரவி ஆர்த்தியின் பிரிவிற்கு அவரது மாமியாரும், அவரின் வளர்ப்பு மகன் ஷங்கரும் தான் காரணம் என்று சோசியல் மீடியாவில் கூறிக் கொண்டு வருகிறார்கள்.
ஆடம்பரமான வாழ்க்கை: இதுகுறித்து, பாடகி சுசித்ரா தனது யூடியூப் பக்கத்தில் பேசி உள்ளார். அதில், இந்த விவாகரத்தில் என் ஆதரவு ஜெயம் ரவிக்கு தான். ஆர்த்தி கூட எல்லாம் வாழவே முடியாது, அவர் மிகவும் ஆடம்பரமான பெண், அப்படி இருக்கும் போது ஜெயம் ரவி நைட் அண்ட் டே வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படியே வீட்டுக்கு சென்றாலும் அர்த்தி என்ன மனநிலையில் இருப்பார் என்று சொல்லவே முடியாது. ஏதோ அவர் அழகாக இருந்ததால், இத்தனை ஆண்டுகள் அவரின் முகத்தை பார்த்து வாழ்ந்துவிட்டார். ஆனால் அழகு எத்தனை நாளைக்கு இருக்கும். அது மட்டுமில்லாமல் ஜெயம் ரவி குடும்பம் மற்றவர்கள் போல் இல்லாமல், சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பம். அவர்களின் குடும்பம் எப்போதும், மற்றவர்களை மதிப்பவர்கள் என்று சுசித்ரா அந்த வீடியோவில் பேசி உள்ளார்.
கைவசம் உள்ள படம்: ஜெயம் ரவி கைவசம் உள்ள மற்றொரு திரைப்படம் ஜீனி. இப்படத்தை இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய புவனேஷ் அர்ஜுனன் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி, வாமிகா கப்பி ஆகியோர் நடிக்கின்றனர். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மேலும் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை என்கிற திரைப்படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் ஜெயம் ரவி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் பிரதர், தனி ஒருவன் 2 போன்ற படங்கள் கைவசம் உள்ளது.


Click it and Unblock the Notifications











