Aarti - Ravi - Dhanush: ஆர்த்தி - ரவி மோகன் விவகாரத்தில் தனுஷ்ஷை கோர்த்துவிடும் சுசித்ரா.. எங்க போய் முடியுமோ?
சென்னை: திரைத்துறையில் இருப்பவர்கள் சொந்த வாழ்க்கை குறித்து ஏதாவது கிசு கிசு கிளம்பினாலே இணையத்தில் பலரும் அதற்கு கண், காது, மூக்கு வைத்து அதை பெரிதாக மாற்றிவிடுவார்கள். அப்படியான விஷயங்களைப் பேசுவதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பவர் பின்னணி பாடகி சுசித்ரா. இவர் தற்போது அதிகம் பேசி வரும் விவகாரம் என்றால் அது ஆர்த்தி - ரவி விவகாரம்தான். அவர்கள் விவகாரத்தில் பலரும் கெனிஷா குறித்தும் ஆர்த்தியின் குடும்பத்தினர் குறித்தும் பேசி வருகின்றனர்.
ஏற்கனவே ஆர்த்தி, ரவி மோகன், கெனிஷா குறித்து பேசிய பாடகி சுசித்ரா தற்போது, இந்த விவகாரத்தில் தனுஷ் மற்றும் ஆர்த்தியின் பி.ஆர். அகமது மீரான் என்பவர் குறித்தும் விமர்சித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரவி மோகன், ஆர்த்தி மற்றும் கெனிஷா தொடர்பான பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும்போது, சுசித்ரா தொடர்ந்து ரவி மோகன் மற்றும் கெனிஷாவை டேக் செய்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் இவரது அனைத்து பதிவுகளும் ஆர்த்திக்கு எதிராக இருக்கிறது என்பதைக் கடந்து ரவி மோகனுக்கும் குறிப்பாக கெனிஷாவுக்கும் ஆதரவாக உள்ளது.
ஆனால் இம்முறை ஆர்த்தியை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, அவரது பதிவில், " ஆர்த்தி நீங்கள் எலிகளை வேலைக்கு நியமித்தால் அவை எப்போதும் எலிகளைப் போலவேதான் வேலை செய்யும். நீங்கள் சம்பளம் அதிகமாக கொட்டிக் கொடுக்கிறீர்கள் என்பதற்காக அதன் வேலைப்பாடு மாறாது என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் அல்லவா? உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் உங்களின் புதிய பி.ஆர். அகமது மீரானைக் குறிப்பிடலாம்.

பெயர் மாற்றம்: கெனிஷாவின் முன்னாள் பெயர் சாண்ட்ரா சித்தாரா என்பதை அகமது மீரான் கண்டுபிடித்துவிட்டார். ஆனால் கெனிஷா ஏன் தனது பெயரை மாற்றிக் கொண்டார் என்பது மிகவும் முக்கியமானது. இதற்கு முன்னர் நடைபெற்ற தவறான திருமணத்தில் இருந்து வெளியே வர இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம். ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டது போல.
தனுஷ் என்ன செய்தார்? : அகமது உங்களிடம் ஒன்று கேட்கிறேன், ரவியின் முதுகுக்குப் பின்னால், ஆர்த்தியும் தனுஷ்ஷும் நடந்து கொண்டவை குறித்து எப்போது வெளியே சொல்லப் போகிறீர்கள்? இப்போது ஜெயம் ரவி மற்றும் கெனிஷா மீது கருப்பு மையை பூசி வருகிறார் ஆர்த்தி. எதிர்காலத்தில் ஆர்த்தியும் தனுஷ்ஷும் இணைந்து வெளியே சென்றால் அவர்களை மக்கள் பாராட்டுவார்கள் என்று நினைக்கிறாரா? அல்லது இது தொடர்பாக நான் வீடியோ வெளியிடுவதற்காக நீங்கள் காத்துக் கொண்டு உள்ளீர்களா? அகமது மீரான் மற்றும் ஆர்த்தி உங்கள் இருவருக்கும் இது அவமானமாக இல்லையா?" என்று பதிவிட்டுள்ளார்.

தேவை இல்லாமல்: இவரது பதிவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. குறிப்பாக ஆர்த்தி - ரவி மோகன் விவாகரத்து விவகாரத்தில் தேவையில்லாமல் தனுஷ்ஷை இழுத்து விடுகிறார் என்று விமர்சித்து வருகிறார்கள். தனுஷ் ரசிகர்கள் சுசித்ராவின் பதிவுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார், ஜெயம் ரவி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











