அய்யோ அவருடன் ட்ராவல் செய்யவே முடியாது.. தனுஷுக்கு விவாகரத்து.. பகீர் கிளப்பிய பிரபலம்
சென்னை: தனுஷும் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் நேற்று சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார்கள். இதன் காரணமாக 20 வருட திருமண பந்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க நயன்தாரா மீது நேற்று தனுஷ் வழக்குப்பதிவும் செய்திருக்கிறார். இப்படி நேற்று முதல் தனுஷ்தான் கோலிவுட்டின் ஹெட்லைன்ஸாக இருந்துவருகிறார். சூழல் இப்படி இருக்க பிரபல பாடகியும், நடிகையுமா சுசித்ரா தனுஷ் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
தனுஷ் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றவர். அந்தப் பெயர் மட்டுமின்றி சர்ச்சைகளை அதிகம் சந்திக்கும் நடிகர் என்ற பெயரையும் அவர் பெற்றிருக்கிறார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 20 வருடங்கள்வரை இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்துவந்தார்கள். அதுமட்டுமின்றி கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாகவும் வலம் வந்தார்கள்.

பிரிவு: சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு பிரிந்த இரண்டு பேரும்; அண்மையில் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தார்கள். அந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடந்துவந்த சூழலில் நேற்று தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். அதன்படி இரண்டு பேருக்கும் சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைத்திருக்கிறது. இதனால் கோலிவுட்டில் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மேலும் இன்னும் கொஞ்சம் இரண்டு பேரும் யோசித்திருக்கலாம் என்றும் ஒருதரப்பினர் கூறிவருகின்றனர்.
நயன் Vs தனுஷ்: இது ஒருபக்கம் இருக்க தனுஷை சுற்றி இன்னொரு சர்ச்சையும் எழுந்தது. அதாவது நயன்தாரா ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் ஃபுட்டேஜுகளை பயன்படுத்த தனுஷ் அனுமதி மறுத்துவிட்டார்.ஆனாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சிலவற்றை அந்த ஆவணப் படத்தில் பயன்படுத்தியிருந்தார்கள். இதன் காரணமாக தனுஷும், அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட கோபம் அடைந்தனர். இப்படி செய்யும் நயன் எதற்காக தனுஷை தாக்கி அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார்கள்.
தனுஷ் தொடர்ந்த வழக்கு: தனுஷும் இந்த விவகாரத்தை சட்டப்பூர்வமாக அணுகியிருக்கிறார். நேற்று நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மீது வழக்கும் தொடர்ந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து தனுஷை சுற்றி பிரச்னைகளாகவே ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் பிரபல பாடகியும், நடிகையுமான சுசித்ரா தனுஷ் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
சுசித்ரா பேட்டி: அந்தப் பேட்டியில் அவர், "தனுஷை தாக்கி நயன் வெளியிட்ட அறிக்கைக்கு தனுஷுடன் நடித்த நடிகைகளே ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். தனிப்பட்ட ரீதியில் அவர்களை தனுஷ் கோபமூட்டியிருக்கலாம். அவர் ஒரு சைக்கோ. பார்ப்பதற்கு நல்லவர் போலவே இருப்பார். அவர் ஒன்றும் சிவகார்த்திகேயனுக்கோ, அனிருத்துக்கோ வாய்ப்பு கொடுக்கவில்லை. நான், நயன் எல்லாம் தனுஷின் சங்காத்தமே வேண்டாம் என்று முடிவு செய்து அவரிடமிருந்து விலகியிருக்கிறோம்.
ட்ராவல் செய்ய முடியாது: அவர் ஒரு ஏமாற்றக்கூடிய நண்பர். எனது வாழ்க்கையில் சுச்சி லீக்ஸை செய்ததே தனுஷ்தான். அவருடன் எல்லாம் நீண்ட நாட்கள் ட்ராவல் செய்யவே முடியாது. அந்த அளவுக்கு அவர் மோசமானவர். என்னைப் பொறுத்தவரைக்கும் தனுஷ் என்பவர் ஒரு காமெடி பீஸ்தான்" என்றார். சுசித்ராவின் இந்தப் பேட்டி தனுஷ் ரசிகர்களிடையே உச்சக்கட்ட கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











