Ravi - Aarti: கெனிஷா எந்த உடையோடு சுத்துனா உங்களுக்கு என்ன? பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுத்த சுசித்ரா
சென்னை: ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், ரவி மோகனை ஆர்த்தி விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். அதன் பின்னர் ஆர்த்தி மற்றும் ஆர்த்தியின் குடும்பத்தை விமர்சித்து ரவி மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் நீதிமன்றத்தை விட சமூக வலைதளங்களில் அவர்களின் விவாகரத்து குறித்த பேச்சுகள் மோதல் போல மாறி வருகிறது.
ரவி மோகனின் அறிக்கைக்குப் பின், பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்றில், கெனிஷாவின் ஆடைகள் குறித்து மிகவும் மோசமாக விமர்சித்தார். கெனிஷாவின் ஆடைகள் குறித்து பயில்வான் விமர்சித்ததற்கு பலரும் இணையத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சுசித்ரா வெளியிட்டுள்ள வீடியோவில், " கெனிஷா பிராவும் ஜீன்ஸும் அணிந்துள்ளார், கெனிஷா பிராவும் ஷார்ட்ஸும் அணிந்துள்ளார் என்று விமர்சித்துக் கொண்டு உள்ளீர்களே? உங்கள் வீட்டில் இருப்பவர்கள் பிரா அணிவதில்லையா? வீட்டில் உள்ள குழந்தைகள் பிரா அணிவதில்லையா? ஒருவர் வளர்ந்து விட்டார் என்பதற்காக அவரது ஆடை சுதந்திரத்தை கேள்வி கேட்பது தவறு என்று பயில்வான் ரங்கநாதனின் பெயரைக் குறிப்பிடாமல் அவருக்கும் அவரது கருத்து ஆதரவு தெரிவித்து பதிவிட்டவர்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

குழந்தைகள்: அதேபோல், ஆர்த்தி குறித்து பேசும்போது, " நீங்கள் எல்லோரும் ரவி மோகனின் குழந்தைகள் குறித்து கவலைப் பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். அந்த குழந்தைகள் என்ன ஆதரவற்றோர் இல்லத்தில் நின்று கொண்டு அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என்று அழுது கொண்டா உள்ளார்கள். அந்த குழந்தைகள் பங்காளாவில் செம ஜாலியாக அம்மா செல்லம், பாட்டி செல்லம் , அத்தை செல்லம், த்ரிஷா, குஷ்பு செல்லம் என்று இருக்கிறார்கள். இதற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு, குழந்தைகள் பெற்றவர்கள் வரலாற்றிலேயே விவாகரத்து செய்தது இல்லையா? அவர்கள் ( ஆர்த்தி மற்றும் ஆர்த்தி தரப்பினர்) சொல்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள். ரவி மோகன் ஐந்து பக்கத்திற்கு கதறுகிறார். ஆனால் ரவி மோகனை நம்ப மாட்டேன் என்கிறீர்கள்.
கவன ஈர்ப்பு: ஜெயம் ரவிக்கு தனது குழந்தைகள் மீது அக்கறை இல்லை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஆனால் அதுபோல பல குடும்பங்களில் இருக்கிறார்கள் அல்லவா? இந்த இரண்டு குழந்தைகளும் ரவி மோகனுடன் நெருக்கமாக இருக்க கூடாது என்ற எண்ணத்தில் ஆர்த்தியின் அம்மா செயல்பட்டுள்ளார். வளர்ந்த ஜெயம் ரவியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இரண்டு பெண்கள் ( ஆர்த்தி மற்றும் ஆர்த்தியின் அம்மா) இரண்டு சின்ன பசங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மாட்டார்களா?

நல்ல அம்மா இல்லை: அந்த குழந்தைகள் சந்தோஷமாக உள்ளார்கள். ஆர்த்தி குழந்தைகளுடன் ரயில் நிலையத்தில் அமர்ந்திருக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்? ஆனால் ஒரு நல்ல அம்மா இல்லை என்பது மட்டும் தெளிவாகிறது. குழந்தைகளை பயன்படுத்தி ஆர்த்தி தன் மீது கவனத்தை குவிய வைத்து வருகிறார் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? எத்தனையோ குழந்தைகள் ஸ்டெப் மதரிடம் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளார்கள். ஆர்த்திக்காக கொடி தூக்கிக் கொண்டு வருபவர்களுக்காக நான் காத்துக் கொண்டு உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் ரவி மோகன் தனது தோழி கெனிஷாவுடன் கலந்து கொண்டார். இவர்கள் புகைப்படம் அன்றைய நாள் முழுவதும் செம டிரெண்டிங்காக மாறியது. அன்றைய நாள் இரவே, ஆர்த்தி அதாவது ரவியின் மனைவி ரவி குறித்து காட்டமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனால் ஆர்த்திக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்தார்கள். இந்நிலையில் நேற்று அதாவது மே மாதம் 15ஆம் தேதி ரவி மோகன் தனது 16 ஆண்டுகால திருமண வாழ்க்கை குறித்து குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார். இது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.
சுசித்ரா: இந்நிலையில் இவர்கள் விவகாரம் தொடர்பாக பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " ஜெயம் ரவியும் கெனிஷாவும் என்ன தப்பு செய்தார்கள். தமிழ் சினிமா உலகில் மற்றவர்கள் செய்யாத தவறையா ஜெயம் ரவி செய்துவிட்டார்?. எல்லோரும் கமுக்கமாக செய்கிறார்கள். முதலில் இவர் தவறாக தொடங்கினார். தற்போது எல்லாம் சரியாகத் தானே போய்க்கொண்டு உள்ளது. அந்த பெண்ணுக்கு எந்த அளவுக்கு அங்கீகாரம் கொடுக்கிறார். அனைத்து பெண்களுமே அப்படித் தானே தான் நடத்தப்பட வேண்டும் என்று நினைப்பீர்கள். கெனிஷாவை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள்.
ஆர்த்தியை பார்த்து ஜொள்ளு: இத்தனை ஆண்டுகள் ஒர்க் ஆகாத திருமணம் குறித்து ஒருவர் ( ஆர்த்தி) அழுது கொண்டே இருக்கிறார் என்பதற்காக, அவர் யார் என்றே தெரியாமல், நீங்கள் அவருக்கு ஆதரவாக நிற்கிறீர்கள். அவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தவிர உங்களுக்கு வேறு என்ன தெரியும்? இது கடந்து அவர் குறித்து உங்களுக்கு தெரிந்த விஷயம் என்ன? வெறுமனே அவரது உருவத்தைப் பார்த்து அவருக்கு ஆதரவனான நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள் என்றால், நீங்கள் தான் அவரைப் பார்த்து ஜொள்ளு விடுகிறீர்கள் என்று அர்த்தம்.
கெனிஷாவின் ஆடைகள்: கெனிஷா என்ன தவறு செய்தார்? யாரும் பகிராத மியூசிக் வீடியோக்களையா அவர் பகிர்ந்து விட்டார்? இப்போது மட்டும் அவை உங்களுக்கு உறுத்துவது ஏன்? ஆண்ட்ரியா மேடையில் அணியும் ஆடைகளை போல தான் இவரும் வீடியோக்களில் அணிந்துள்ளார். வித்யா பாடும் பாடல்களைப் போல தான் இவரும் பாடுகிறார். உடனே ஜெயம் ரவியையும் கெனிஷாவின் தொழிலையும் கேவலமாக சித்தரிக்கிறீர்களே, உங்களுக்கு எல்லாம் அசிங்கமாக இல்லையா? ஜெயம் ரவி தனது பெயரில் இருந்து ஜெயம் என்பதை எடுக்காமல் இருந்திருக்கலாம். ஜெயம் என்று உங்கள் பெயருடன் இருப்பது என்பதில் எந்தவிதமான கிரிஞ்சும் கிடையாது" என்று பேசிய வீடியோவை சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு தொடர்பாக இணையவாசிகள் பேசிக் கொள்வதும், ஆர்த்தி மற்றும் ரவி மோகனுக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











