Aarti - Ravi: யாருமே செய்யாத தவறா ஜெயம் ரவி செய்தது? கெனிஷாவுக்கு அப்லாஸ்.. ஆர்த்தியை விளாசிய பாடகி சுசித்ரா

சென்னை: நடிகர் ரவி மோகன் தனது திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாகவும் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாகவும் கடந்த ஆண்டு அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்ததும், ரவியின் இந்த முடிவுக்கு காரணம் பாடகி கெனிஷா என்றும், ஆர்த்தியை விவாகரத்து செய்துவிட்டு, கெனிஷாவை திருமணம் செய்து கொள்ள ரவி பிளான் போட்டுள்ளார் என்று கூறினார்கள். இந்த விமர்சனத்திற்கு, சொந்த விஷயங்கள் குறித்து யாரும் பேசாதீர்கள் என்று பதில் அளித்தார் ரவி.


கடந்த வாரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் ரவி மோகன் தனது தோழி கெனிஷாவுடன் கலந்து கொண்டார். இவர்கள் புகைப்படம் அன்றைய நாள் முழுவதும் செம டிரெண்டிங்காக மாறியது. அன்றைய நாள் இரவே, ஆர்த்தி அதாவது ரவியின் மனைவி ரவி குறித்து காட்டமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனால் ஆர்த்திக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்தார்கள். இந்நிலையில் நேற்று அதாவது மே மாதம் 15ஆம் தேதி ரவி மோகன் தனது 16 ஆண்டுகால திருமண வாழ்க்கை குறித்து குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார். இது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.

Singer Suchitra Takes a Stand Supports Ravi Mohan And KENEESHAA and Slams Who Supports Aarti

சுசித்ரா: இந்நிலையில் இவர்கள் விவகாரம் தொடர்பாக பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " ஜெயம் ரவியும் கெனிஷாவும் என்ன தப்பு செய்தார்கள். தமிழ் சினிமா உலகில் மற்றவர்கள் செய்யாத தவறையா ஜெயம் ரவி செய்துவிட்டார்?. எல்லோரும் கமுக்கமாக செய்கிறார்கள். முதலில் இவர் தவறாக தொடங்கினார். தற்போது எல்லாம் சரியாகத் தானே போய்க்கொண்டு உள்ளது. அந்த பெண்ணுக்கு எந்த அளவுக்கு அங்கீகாரம் கொடுக்கிறார். அனைத்து பெண்களுமே அப்படித் தானே தான் நடத்தப்பட வேண்டும் என்று நினைப்பீர்கள். கெனிஷாவை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள்.

ஆர்த்தியை பார்த்து ஜொள்ளு: இத்தனை ஆண்டுகள் ஒர்க் ஆகாத திருமணம் குறித்து ஒருவர் ( ஆர்த்தி) அழுது கொண்டே இருக்கிறார் என்பதற்காக, அவர் யார் என்றே தெரியாமல், நீங்கள் அவருக்கு ஆதரவாக நிற்கிறீர்கள். அவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தவிர உங்களுக்கு வேறு என்ன தெரியும்? இது கடந்து அவர் குறித்து உங்களுக்கு தெரிந்த விஷயம் என்ன? வெறுமனே அவரது உருவத்தைப் பார்த்து அவருக்கு ஆதரவனான நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள் என்றால், நீங்கள் தான் அவரைப் பார்த்து ஜொள்ளு விடுகிறீர்கள் என்று அர்த்தம்.

Singer Suchitra Takes a Stand Supports Ravi Mohan And KENEESHAA and Slams Who Supports Aarti

கெனிஷாவின் ஆடைகள்: கெனிஷா என்ன தவறு செய்தார்? யாரும் பகிராத மியூசிக் வீடியோக்களையா அவர் பகிர்ந்து விட்டார்? இப்போது மட்டும் அவை உங்களுக்கு உறுத்துவது ஏன்? ஆண்ட்ரியா மேடையில் அணியும் ஆடைகளை போல தான் இவரும் வீடியோக்களில் அணிந்துள்ளார். வித்யா பாடும் பாடல்களைப் போல தான் இவரும் பாடுகிறார். உடனே ஜெயம் ரவியையும் கெனிஷாவின் தொழிலையும் கேவலமாக சித்தரிக்கிறீர்களே, உங்களுக்கு எல்லாம் அசிங்கமாக இல்லையா? ஜெயம் ரவி தனது பெயரில் இருந்து ஜெயம் என்பதை எடுக்காமல் இருந்திருக்கலாம். ஜெயம் என்று உங்கள் பெயருடன் இருப்பது என்பதில் எந்தவிதமான கிரிஞ்சும் கிடையாது" என்று பேசிய வீடியோவை சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X