ஜெயம் ரவி தான் பாவம்.. ஆர்த்தி கூட வாழவே முடியாது.. சுசித்ரா சொன்னது நடந்துபோச்சு!

சென்னை: கடந்த சில வாரங்களாக ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து செய்வதாக கிசுகிசுக்கள் வெளிவந்த நிலையில், ஜெயம் ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில், தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஜெயம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஜெயம் ரவி. அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல ஹிட் திரைப்படத்தில் நடித்தார். அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று நல்ல வசூலை அள்ளியது.

jayam ravi aarthi divorce suchitra

ஜெயரம் ரவி, ஆர்த்தி பிரிந்தனர்: கடந்த 2009ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை ஜெயம் ரவி காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவி உடன் சேர்ந்து நடித்திருந்தார். இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக செய்திகள் வெளியான போது, இது வெறும் வதந்தி என சொல்லப்பட்டது. ஆனால், ஆர்த்தி பயோவில் இருக்கும் ஜெயம் ரவியின் ஐடியை நீக்கினார். அதேபோல், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ஜெயம் ரவியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது, ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். அதில், வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

வாழ்ந்ததே பெரிசு: ஆர்த்தி ஜெயம் ரவி விவகாரம் புகைந்து கொண்டு இருக்கும் போதே, பாடகி சுசித்ரா, தனது யூடியூப் சேனலில் பேசி இருந்தார். அதில், என் ஆதரவு ஜெயம் ரவிக்கு தான். ஆர்த்தி கூட எல்லாம் வாழவே முடியாது, அவர் மிகவும் ஆடம்பரமான பெண், அவளை மகிழ்ச்சியாக வைத்து இருக்க வேண்டும் என்றால், ஜெயம் ரவி நைட் அண்ட் டே வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படியே வீட்டுக்கு சென்றாலும் ஆர்த்தி என்ன மனநிலையில் இருப்பார் என்று சொல்லவே முடியாது.

ஆர்த்தி, அழகாக இருந்ததால், குழந்தைகள் இருந்ததால், இத்தனை ஆண்டுகள் அவரின் முகத்தை பார்த்துக்கொண்டே வாழ்ந்துவிட்டார். இத்தனை வருசம் ஜெயம் ரவி ஆர்த்தி கூட வாழ்ந்ததே பெரிசு என்று பாடகி சுசித்ரா அந்த வீடியோவில் பேசி இருந்தார். தற்போது அவர் சொன்னபடியே நடந்து விட்டது என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X