விஜய் ஆண்டனி மகள் இறப்பின் காரணம்? சுசித்ரா சொன்ன அந்த விஷயம்!

சென்னை: பிரபல பாடகி மற்றும் டப்பிங் கலைஞரான சுசித்ரா கடந்த சில நாள்களாக நடிகர்,நடிகைகள் குறித்து, பல திடுக்கிடும் தகவல்களை கூறி, சினிமா வட்டாரத்தையே திணறடித்து வருகிறார். தற்போது அவர் அளித்த இரண்டாவது பேட்டியில், விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலைக்கான காரணத்தை கூறி மீண்டும் புயலை கிளப்பி உள்ளார்.

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஹிட் பாடல்களை பாடிய பாடகி சுசித்ரா, 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட "சுச்சி லீக்ஸ்" என்ற விஷயத்தின் மூலம் பெரும் பல விதமான சர்ச்சைகளை சந்தித்தார். இந்த சர்ச்சைக்கு பிறகு, இந்தியாவை விட்டு லண்டனில் செட்டிலாகி, சினிமா பக்கம் வராமல் இருந்த நடிகை சுசித்ரா, தனக்கு என்று சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில், திரைப்பட விமர்சனம் குறித்து பேசி வருகிறார்.

Singer Suchitra Talks about the death of Vijay Antony s daughter Meera

சுசித்ரா புயல் பேட்டி: இந்நிலையில் சுசித்ரா, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். சுசி லீக்ஸ் என்பது ஒரு ப்ராங் தான், இதில் தேவையே இல்லாமல் என்னை, கார்த்திக் குமார் மாட்டிவிட்டார். இந்த ப்ராங் செய்ய ஒரு ட்விட்டர் கணக்கு தேவைப்பட்டதால், என் முன்னாள் கணவர் என் அக்கவுண்டை கொடுத்தார். இதில் நான் பலிகடாவாக ஆகிவிட்டேன். இதற்கு முக்கிய காரணம் தனுஷ், கார்த்திக் குமார் தான், இவர்கள் இரண்டு பேரால் என் வாழ்க்கையே போச்சு என்றார். மேலும், இவர்கள் தான் பயில்வானுக்கு காசு கொடுத்து பேச சொல்கிறார்கள். பயில்வான் ரங்கநாதன் படுமோசமான நபர், அவர் பத்திரிக்கையாளரே இல்லை, அவர் பிட்டு படத்திற்கு ஏஜெண்டாக செயல்பட்டார் என்று அடுக்கடுக்கான புகாரை கூறி இணையத்தையே கதிகலங்க வைத்தார்.

கொக்கைன் பார்ட்டி: சுசித்ரா கொடுத்த முதல் பேட்டியே மிகப்பெரிய அளவில் புயலை கிளப்பிய நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு இரண்டாவதாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில், கோலிவுட் சினிமாவில், வெள்ளித்தட்டில் கொக்கைன் போன்ற போதை மருந்து பார்ட்டி நடைபெறும். இந்த பார்ட்டியில் சிம்பு, வெங்கட் பிரபு மற்றும் யுவன் ஷங்கர் ராஜா போன்ற பல பணக்கார வீட்டு பிள்ளைகள் கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு முழுநேர வேலையே இதுதான். வெளியில் தன்னை நல்லவரை போல காட்டிக் கொள்ளும் விஜய்யின் வீட்டில் இதுபோல பல பார்ட்டிகளில் நடந்திருக்கிறது. திரிஷாவும் இந்த கேங்கில் ஒருவர்தான், தனது பணக்கார நண்பர்களுடன் பெட் கட்டி, விஜய் வீட்டின் முன் குடித்துவிட்டு அவர் நடனமாடினார் என்று பல நடிகர்கள் குறித்து அடுக்கடுக்காக புகார் கூறினார்.

விஜய் ஆண்டனி மகள்: இதையடுத்து குழந்தை வளர்ப்பு குறித்து பேசிய சுசித்ரா, விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலைக்கு என்ன காரணம் என தெரியுமா என கேட்டு குண்டை தூக்கி போட்டுள்ளார். அதில், விஜய் ஆண்டனி படங்களில் ஹீரோவாக நடிப்பதற்காக தன்னுடைய உடல் அமைப்பை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றி இருக்கிறார். இதேபோன்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய உடல் தோற்றத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மீரா, விஜய் ஆண்டனியிடம் கேட்டுள்ளார்.

காரணம் இதுதான்: அவருடம், மீரா கேட்கும்போதெல்லாம் ஒரு சில நாடுகளின் பெயர்களை சொல்லி, கண்டிப்பாக அங்கு கூட்டிட்டு போய் பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சுக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். மீரா, தற்கொலை செய்து கொண்ட அன்று, பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி பேசி இருக்கிறார். ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன விஜய் ஆண்டனி சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை தூக்கி எறிந்து விட்டு பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்து வைக்க முடியாது என்று கோபமாக சொல்லிவிட்டு போய் விட்டாராம். விஜய் ஆண்டனியின் பேச்சால் மனம் நொந்து போன மீரா, தற்கொலை செய்து கொண்டதாக சுசித்ரா தன்னுடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார். சுசித்ரா பேசி வரும் பல விஷயம் நம்பக்கூடிய வகையில் இருக்கிறது என்பதால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X