TVK Vijay: விஜய்க்கு த்ரிஷா.. இப்படியே போனால் தேர்தலில் வெல்லவே முடியாது - சுசித்ரா பேச்சு ட்ரெண்ட்!

சென்னை: தமிழ் சினிமாவில் விஜய் மாஸ் ஹீரோவாக உருவாவதற்கு முன்னர் இருந்தே அவரைச் சுற்றி பல கிசு கிசுக்கள் பேசப்பட்டது. குறிப்பாக ஒரு பிரபல நடிகையுடன் தீவிர காதலில் இருந்தார், அதனால்தான் அவர் தனது படங்களில் அவருடனே அதிகம் நடித்து வந்தார் என்றெல்லாம் பேசப்பட்டது. இந்த கிசுகிசுக்கள் எல்லாம் ஓய்ந்த பின்னர் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுப்பதில் நடிகர் விஜய் கவனம், செலுத்தி வந்தார். விஜய் மாஸ் ஹீரோவாக உருவான பின்னர், நடிகை த்ரிஷாவுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். இந்த கிசுகிசுவுக்கு விஜய்யின் மனைவி வெளிநாட்டில் இருந்ததும் காரணமாக கூறப்பட்டது.

இப்படியான நிலையில் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் விஜய் குறித்த பல்வேறு கிசுகிசுக்கள் இணையத்தில் அதிகம் உலா வருகின்றது. குறிப்பாக விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க நடிகை த்ரிஷா பகிர்ந்திருந்த போட்டோ இணையத்தில் வேகமாக பரவியது. அதில் இருவரும் தனியாக ஒரு லிஃப்ட்டில் இருக்கும்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் இதுவரை வெளிவராத புகைப்படம் என்பதால் இந்த புகைப்படம் குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் பேசப்பட்டது.

Singer Suchitra Trisha Vijay TVK

இந்த சர்ச்சை முடிவதற்கு முன்னர், வாரிசு படப்பிடிப்பின்போது நடிகை த்ரிஷா, ராதிகா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் ஒரே அறையில் இருக்கும் புகைப்படமும் லீக் ஆனதால் விஜய் - த்ரிஷா குறித்த கிசுகிசுக்கள் உச்சம் தொட்டது. இப்படியான நிலையில் அண்மையில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் பேசும்போது கூட இந்த கிசுகிசுக்களுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார்.

ஜெயம் ரவி விவகாரம்: இந்நிலையில் பாடகி சுசித்ரா நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து குறித்து பேசியுள்ளார். அதில் ஜெயம் ரவி ஆர்த்தியுடன் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததே பெரிய விஷயம் என சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்தார். இப்படியான நிலையில் விஜய் - த்ரிஷா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அதில், “ விஜய் ஒரு வெற்றிகரமான மனிதர் தனிமைப்படுத்தப்பட்டால் ஒட்டுண்ணிகள் உள்ளே ஊடுருவிடும். அதுதான் இங்கு நடக்கின்றது. விஜய் தன்னைத் தானே தனிமை படுத்திக் கொண்டார்.

த்ரிஷா ஒட்டுண்ணி: அந்த நேரத்தில் அவர் முடிவெடுத்ததுதான் அரசியல். அரசியலில் விஜய்யால் அவரது அப்பா மற்றும் அம்மா இல்லாமல் வெற்றி பெற முடியாது. மனைவி சங்கீதாவின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம். ஒரு ஈகோவினால் பிரிந்த போன குடும்பத்தை சேர்த்து வைக்காமல் போனதால் த்ரிஷா போன்ற ஒட்டுண்ணுகள் நுழைகின்றன. . அவர்கள் இருவரும் லிஃப்ட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டு அவர் கூறுவதே அதைத்தான்.

தேர்தலில் வெல்ல முடியாது: எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா அரசியல் வாழ்க்கையைப் போல் இவர்களும் ஏற்படுத்த நினைகின்றார்கள். விஜய்க்கு இதுபோன்ற ஆலோசனைகளை வழங்கிவது யார் என்று தெரியவில்லை. இப்படியே போய்க்கொண்டு இருந்தால் விஜய்யால் தேர்தலில் வெற்றி பெறவே முடியாது. தேர்தலில் வெற்றி பெற இது சரியான வழியும் கிடையாது. விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய்யுடன் எந்தவிதமான ஈகோவும் பார்க்காமல் விஜய்யுடன் இணைந்து அவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X