பாதி படத்தில் விபச்சாரம்.. அவருக்கு மட்டும் ஏன் இந்த வெறி.. கமலை வம்பு இழுத்த சுசித்ரா!

சென்னை: பாடகி சுசித்ரா என்றாலே சர்ச்சைக்கு பெயர் போனவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இவர் வாய் திறந்து ஏதாவது போக அது பெரிய அளவில் வைரலாகிவிடும். இதனால், இனி நான் எதைப் பற்றியும் பேச மாட்டேன் என மீடியாவில் தலை காட்டாமல் இருக்கும் சுசித்ரா, இன்ஸ்டாகிராமில் கமல்ஹாசனை வம்பு இழுத்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். இது தற்போது டிரெண்டாகி வருகிறது.

பின்னணி பாடகியான சுசித்ரா, ஹிட் பாடல்களை தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடி பிரபலமானார். இவர், சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து சினிமாவில் இருந்தே காணாமல் போனார். அதன்பின் பல ஆண்டுகள் அமைதியாக இருந்த சுசித்ரா கடந்த ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் தனுஷ் குடித்துவிட்டு ஒரே அறையில் இருந்தார்கள். இல்லாமல் அவர்கள் எல்லை மீறி நடந்தார்கள் என்றார்.'

singer suchitra Kamal haasan
Photo Credit: suchitra instagram

பாடகி சுசித்ரா: மேலும் கமலஹாசன் நடத்தும் கேளிக்கை விருந்துகளில் வெள்ளி தாம்பாள தட்டில் போதை பொருள் கொக்கைன் அளிக்கப்படும். தமிழ் திரைப்பட உலகில் போதைப்பொருள் என்பது சகஜமாகிவிட்டது என்று சர்வ சாதாரணமாக கூறியிருந்தார். அதன் பின் ஸ்ரீகாந்த் போதை பொருள் வழக்கில் கைதான போது, நான் அப்போது சொன்ன போது யாரும் அதை நம்பவில்லை. அப்போது அது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது என்று பேசியிருந்தார்.

ஏன் இந்த வெறி: நான் எந்த சேனலுக்கும் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று மகீரங்கமாக சொன்ன பாடகி சுசித்ரா, தொடர்ந்து யாரையாவது வம்பு இழுத்துக்கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் உலக நாயகன் கமலை வம்புக்கு இழுத்த ஓரு பதிவினை போட்டுள்ளார். அதில், விபச்சாரத்தை கொண்டாடிய கமலின் படங்கள் பதிவிட்டு, மூன்றாம் பிறை, நாயகன், விக்ரம்,குணா, மகாநதி, குருதிப்புனல், ஹே ராம், அன்பே சிவம், மும்பை எக்ஸ்பிரஸ், தக் லைஃப் என பதிவிட்டுள்ளார்.

மிகப்பெரிய தவறு: மேலும், பஞ்சதந்திர நடிகர் (Camel haaasan) ஒட்டக ஹாசனுக்கு சிவப்பு உலகத்தின் மீது ஏன் இந்த மோசமான மோக வெறி? நிஜ வாழ்க்கையில் அவர், அவர்களுக்காக எந்தவிதமான உதவியையும் செய்யவில்லை. படங்களில் கூட அவர்களுக்கு எந்த புரிதலோ , தீர்வோ வழங்கப்பட்டதில்லை. ஆனால், அவர்களின் அழகு, உடையை வைத்து ஒரு ஐட்டம் பாடல் மட்டும் நிச்சயம் இருக்கும். அவர்களின் வலியை கபடமற்ற பார்வையாளர்கள் மீது பூசி, அதை காதலாக்கி விடுவார். அது ஒரு பயங்கரமான தவறு என பதிவிட்டுவிட்டு அதை அதை அவசரமாக டெலிட் செய்துள்ளார். உலக நாயகன் கமலஹாசன் நேற்று ராஜ்யசபா எம்பியாக பதவி ஏற்றுள்ள நிலையில், அதை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே பாடகி சுசித்ரா இப்படி ஒரு பதிவினை போட்டு இருக்கிறார். இவ்வளவு பயம் இருக்கும் போது எதற்கு இந்த தேவையில்லாத பதிவு என இணைவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X