கோபிநாத் CM ஆகணும்.. Dog லவ்வர்ஸ் மனுஷ விரோதிங்க.. சுசித்ரா, பனிமலர் பன்னீர்செல்வம் வீடியோ!

சென்னை: தெருவில் திரியும் வெறிநாய்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரோட்டில் நடந்து செல்லும் போது ஏகப்பட்ட பாதிப்புகளை அடைகின்றனர் என நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய சர்ச்சை வெடிக்க காரணமே ஒரு தெருவில் ஒரு தெரு நாய் இருப்பதால் அல்ல தெருவுக்கு தெரு 5 முதல் 10 நாய்கள் என அதன் கூட்டம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருவதால் தான்.

தெருவில் விளையாடும் குழந்தைகள், கடைக்குப்போய் விட்டு திரும்பும் குழந்தைகளை நாய்கள் துரத்துவதும், கடிப்பதுமாக ஏகப்பட்ட புகார்கள், பாதிப்புகள், குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்படுவதை தாண்டி உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வரும் நிலையில், உச்சநீதிமன்றம் வரை இந்த பிரச்சனை எதிரொலித்தது.

Singer Suchitra wants Neeya Naana Gobinath as a Chief Minister and supports Vijay Tv for Dog debate

இந்நிலையில், கடந்த வாரம் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் டாக் லவ்வர்ஸ் மற்றும் தெரு நாய்களால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர் எதிர் தரப்பில் அமர்ந்துக்கொண்டு பேசிய விவாத நிகழ்ச்சியில் நாய்களின் நலன்மீது அக்கறை கொண்ட நடிகை அம்மு, சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட படவா கோபி உள்ளிட்ட பிரபலங்கள் பேசியதும் அதற்கு தொகுப்பாளரான கோபிநாத்தே வன்மையாக கண்டித்ததும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி சோஷியல் மீடியா முழுவதும் நீயா நானாவின் இந்த நாயா நானா ஷோ டிரெண்டானது. இந்நிலையில், அதற்கு பல பிரபலங்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

அம்மு ஆவேசம்: 8 மணி நேரம் ஷோவை நடத்தி விட்டு, வெறும் 45 நிமிடங்கள் மட்டும் எடிட் செய்துப் போட்டுள்ளனர். எங்களுக்கு பேசவே வாய்ப்புக் கொடுக்கவில்லை என்றும் தனியார் யூடியூப் சேனல்களில் அமர்ந்துக்கொண்டு நாய் கடிக்கும் வரை பெற்றோர்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ளாமல் என்ன செய்றாங்க என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகிறார். சோஷியல் மீடியா முழுவதும் அம்முவுக்கு பேச வாய்ப்புக் கொடுத்தபோது அவர் நாய் போல ஊளையிட்டு பேசியதை போட்டு நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.

பனிமலர் பன்னீர்செல்வம் பளிச்: தெரு நாய்களை விட இந்த டாக் லவ்வர்ஸ் தான் ரொம்ப ஆபத்தானவங்க என்பதை நீயா நானா நிகழ்ச்சி வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. தெரு நாய்கள் மீது அக்கறை கொண்டவர்கள், அதன் மீது அலர்ஜி மற்றும் பயம் கொண்டவர்களை கூட டாக் லவ்வர்ஸ் என உட்கார்ந்துக் கொண்டு பேசியவர்களின் பேச்சைக் கேட்டால் டாக் ஹேட்டர்ஸாக மாறீவிடுவார்கள் என தனது கருத்தை பளிச்சென சொல்லிவிட்டார்.

மனுஷ விரோதிங்க: பாடகியும் பிக் பாஸ் பிரபலமுமான சுசித்ரா தெரு நாய்கள் தொல்லை பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது என அரசாங்கமே முதல் முறையாக உருப்படியாக ஒரு விஷயத்தை செய்ய முன் வந்தால் இந்த டாக் லவ்வர்ஸ் மனுஷ விரோதிங்களா இருக்காங்க, இவங்களையும் ஒரு சாக்கு மூட்டையில போட்டு மார்ஸ்ல தூக்கிப் போட்டுடணும் என சுசித்ரா பேசியுள்ளார்.

கோபிநாத் சிஎம் ஆகணும்: வெறி நாய்கள் தொடர்பான நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவிக்கு என்னோட முழு சப்போர்ட்டையும் கொடுக்கிறேன். மனிதர்கள் தான் முக்கியம் என பேசிய நீயா நானா கோபிநாத் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாட்டுக்கு சிஎம் ஆக வேண்டும் என்றும் சுசித்ரா பதிவிட்டுள்ளார். இவர்கள் இருவரது கருத்துக்கும் ஆதரவுகளும் எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X