Suchithra: தனுஷ், சிம்பு மட்டுமில்ல.. ஐஸ்வர்யாவையும் சீண்டிய பாடகி சுசித்ரா!

சென்னை: சினிமாவில் பின்னணி பாடகியாக ஏராளமான ஹிட் பாடல்களை தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடி பிரபலமானவர் சுசித்ரா. இவர், சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து சினிமாவில் இருந்தே காணாமல் போனார். அதன்பின் பல ஆண்டுகள் அமைதியாக இருந்த சுசித்ரா, மீண்டும் பல நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேட்டிகளில் பேசி வருகிறார்.

அந்த வகையில் தற்போது, Red Talkies Youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் செய்தியாளர், நீங்கள் தனுஷ் பற்றி சில விஷயத்தை பேசி இருந்தீர்கள். இதனால், தனுஷ் உங்களை தொடர்பு கொண்டு எதாவது பேசினாரா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுசித்ரா, ஆமாம், சினிமாவில் எனக்கு சம்மந்தமே இல்லாத இரண்டு பேர் எனக்கு போன் செய்து, தனுஷ் அப்படிப்பட்டவர் இல்லை என்று, இப்போதும் கூட, பேசுகிறார்கள். தனுஷ் ஏதாவது எனக்கு சொல்ல வேண்டும் என்றால் அவர், நேரடியாகவே எனக்கு சொல்லலாம்.

suchitra dhanush simbu aishwarya

கோழையாக்கிவிட்டார்கள்: தனுசை அனைவரும் சேர்ந்து கோழையாக்கிவிட்டார்கள், தனுஷ் உண்மையில் நல்ல மனிதர், பாட்டு, டான்ஸ், ஜோக் என்று அவர் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். அவர் சாதாரண டீக்கடையில் பார்ட்டி செய்தால் கூட தெறிக்கவிட்டுவிடுவார். ஆனால், அவருக்கு விஜய் ஏசுதாஸ், விஜய் ஏசுதாஸின் பொண்டாட்டி என அனைவரும், இந்த லைப் ஸ்டைல் ஆசையை காட்டி, இந்த ஷூ தான் போடனும், இந்த பிராண்ட டிரஸ்தான் போட வேண்டும் என்று ஆசை காட்டினார்கள். அதற்கு தனுஷின் பொண்டாட்டியும் ஜால்டா அடித்தார். ஐஸ்வர்யா, சிம்பு மேல இருக்குற காண்டுலத்தான் தனுசை கல்யாணமே பண்ணிக்கிட்டா. நான் அப்போவே தனுஷிடம் ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணிக்காதே என்று சொன்னேன் அவர் தான் கேட்கவில்லை.

தனுஷ் கர்ணன் போல: தனுஷ் நண்பர்களால் தான் இப்படி ஆகிவிட்டார். அவர் நண்பர்கள் வேலை இரண்டையும் பிரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அதை தனுஷ் செய்ய மாட்டார். கர்ணன் போல தான் வளர்ந்தால் பத்து பேரை கூட வளர்ந்துவிடுவேன் என்ற நல்ல எண்ணத்தோடு தான் ஒவ்வொரு படத்தையும் தனுஷ் ஆரம்பிக்கிறார். ஆனால், நண்பர்கள் அவரை தவறாக பயன்படுத்திக் கொள்கிற்னர்.

சிம்பு தான் காரணம்: தனுஷ் படப்பிடிப்பில் சரக்கு அடிக்க வேண்டும் என்றாலும், பெண்களை பாதுகாப்பாக அனுப்பி விடுவார்கள் செய்வார். இதை ஹேமா கமிட்டியில் இருந்த பார்வதி திருவோத்துக்கூட, தனுஷூடன் நடிப்பது பாதுகாப்பாக இருந்ததாகத்தான் சொல்லி இருக்கிறார். தனுஷ் உண்மையில் பிளே பாய் இல்லை, அவருக்கு அந்த இமேசை கொடுத்ததே சிம்பு தான். தனுஷ் பற்றி பல தப்பான விஷயத்தை முதுகுக்கு பின்னாடி வளர்ந்துவிட்டதே சிம்பு தான்.

அவர் பிளே பாய் இல்ல: தனுஷ் ஒரு சைக்கோ என்று தனுஷிடம் பழகும் அனைவரிடமும் சொல்லி கொடுத்ததே சிம்பு தான். ஏன் என்றால், நிறைய நடிகர்களுக்கு தனுஷூடன் சேர்ந்து பேச பிடிக்கும், அவ்வளவு அழகாக பேசக்கூடியவர், தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய இயக்குநர், தனது திறமையால் சீக்கிரம் உச்சத்தை தொட்டார் அவரை பெயரை கெடுத்து, சினிமா வட்டாரத்தில் அவர் பெயர் மோசமாக காரணமானவரே சிம்பு தான் என்று சுசித்ரா அந்த பேட்டியில் பேசி உள்ளார். இந்த பேட்டியைப் பார்த்த இணையவாசிகள் ஒரு பேட்டியில் அவரை மோசமாக திட்டிவிட்டு, இந்த பேட்டியில் இப்படி புகழ்வதற்கு என்ன காரணம் என்று கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X