ஆஹா.. அவங்களும் வராங்களாமே.. அப்போ இந்த சீசன் இன்னும் சூடு பிடிக்கும்.. அடுத்த வைல்டு கார்டா?

சென்னை: பாடகி சுசித்ரா பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் மற்றொரு போட்டியாளராக உள்ளே நுழையப் போகிறார் என்கிற தகவல் தீயாக பரவி வருகிறது.

சூரியன் எஃப்.எம் விஜேவாகவும், பாடகியாகவும் கலக்கி வந்த சுசித்ரா, சுச்சி லீக்ஸ் பிரச்சனைகள் காரணமாக சில காலம் காணாமல் போனார்.

சுசித்ராவுக்கும் நடிகர் கார்த்திக் குமாருக்கும் விவாகரத்தும் ஆனது குறிப்பிடத்தக்கது.

16 போட்டியாளர்கள்

16 போட்டியாளர்கள்

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி வெறும் 80 நாட்கள் தான் நடக்கும் 10 பேர் தான் போட்டியாளர்கள். போட்டியாளர்களுக்கு கொரோனா பரவிடுச்சு என ஏகப்பட்ட புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து 16 போட்டியாளர்களுடன் கலர்ஃபுல்லாக தொடங்கி உள்ளது. பெரும்பாலும் விஜய் டிவியை சார்ந்தவர்களே இம்முறை கலந்து கொண்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

உள்ளே வெளியே

உள்ளே வெளியே

நடிகை ரேகா 2வது வாரம் வெளியேறினார். அவர் வெளியேறுவதற்கு முன்னதாகவே வைல்டு கார்ட் என்ட்ரியாக ஏற்கனவே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜீ தமிழ் விஜே அர்ச்சனா உள்ளே நுழைந்தார். பிக் பாஸ் போட்டியாளர்களுக்கெல்லாம் பட்டங்களை கொடுத்து வந்த உடனே பதற வைத்தார்.

இந்த வாரம் யார்

இந்த வாரம் யார்

இந்த வார எவிக்‌ஷனுக்கு பலரும் நடிகர் ஆரி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளனர். அடுத்ததாக ஆஜீத் மற்றும் அனிதா அதிக ஓட்டுக்களை பெற்று அந்த லிஸ்டில் உள்ளார். இந்த வாரம் ஆஜீத் தான் அவுட்டாவார் என்றும், அந்த அலாவுதீன் பூதத்தை பயன்படுத்தி அவர் வெளியே போகாமல் எஸ்கேப் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாடகி சுசித்ரா வராங்களாம்

பாடகி சுசித்ரா வராங்களாம்

இதுவரை பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்த கணிப்புகள் நூறு சதவீதம் உண்மையாகவே இருந்துள்ளது. இதெல்லாம், கணிப்பு மாதிரியே தெரியல, அங்க இருக்கிறவங்களே தகவல்களை கசிய விடுவது போல தெரிகிறது. இந்நிலையில், இந்த வாரம் எவிக்‌ஷனுக்கு முன்னதாக வியாழனன்று பாடகி சுசித்ரா வீட்டுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுச்சி லீக்ஸ் சர்ச்சைகள்

சுச்சி லீக்ஸ் சர்ச்சைகள்

சென்னையை சேர்ந்த சுசித்ராவுக்கு 38 வயதாகுது. ரேடியோ ஜாக்கியான இவர், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் 100 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார். நடிகர்கள், நடிகைகளின் அந்தரங்க வீடியோக்களை சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் இவரது ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்து லீக் செய்யப்பட்ட நிலையில், இவருக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டது. இந்நிலையில், இவரது பிக் பாஸ் என்ட்ரி, சுசித்ரா பற்றிய புரிதல்களை உண்டாக்கும் என்றே தெரிகிறது.

விட்டு விலகிய கணவர்

விட்டு விலகிய கணவர்

தமிழ் சினிமா திரைப்படங்களில் அதிக அளவு அமெரிக்க மாப்பிள்ளையாக நடித்த நடிகர் கார்த்திக் குமார், சுச்சி லீக்ஸ் சர்ச்சைகளுக்கு பிறகு சுசித்ராவை விட்டு விலகி விவாகரத்து செய்தார். மேலும், சினிமாவில் இருந்து விலகிய அவர், ஸ்டாண்ட் அப் காமெடியனாக பல ஷோக்களை நடத்தி வருகிறார். சமீபத்தில், அமேசானில் வெளியான காமிக்ஸ்தான் தமிழ் ஷோவுக்கு நடுவராக பணியாற்றிய போதும், தன்னுடைய விவாகரத்து விஷயத்தை ஸ்டாண்ட் அப் காமெடியாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X