மெலோடி குயின் சுஜாதா.. இன்று பிறந்த நாள்.. குவியும் வாழ்த்து
சென்னை : மெல்லிய குரலால் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்த சுஜாதா மோகனுக்கு இன்று பிறந்தநாள்.
கேரளத்து பெண்குட்டியான சுஜாதா மோகன் தென்னிந்திய மக்கள் மனதில் இடம் பிடித்த பின்னணி பாடகி.
தனது வசீகரமான குரலால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சுஜாதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 4000 ஆயிரம் பாடல்களை பாடி உள்ளார்.

மெலோடி குயின்
இவரின் மாயக்குரலின் ஜாலம் தமிழில் 90களை ஆட்சி செய்தது என்றே கூறலாம். நூற்றுக்கணக்கான பாடல்களை 90களின் ஆரம்பம் முதல் இறுதி வரை பாடி அசத்தியிருக்கிறார். ‘புதிய முகம்‘ படத்தில் வரும் நேற்று இல்லாத மாற்றம் என்ற பாடல் அப்படியே காதல் ரசம் சொட்ட சொட்ட பாடி காதலை தன் குரலால் அள்ளி தந்து இருப்பார் சுஜாதா. 90களில் மொலோடி குயின் இவர்.

மாயக்குரல்
2000த்தின் ஆரம்பத்திலும் இவரின் மௌவுசு குறையவில்லை என்பதற்கு சான்றாக வந்த. 2001 ஆம் ஆண்டு வெளி வந்த தில் படத்தில் வரும் உன் சமையல் அறையில் பாடல். இவரது மாயக்குரலின் ஜாலம் 2000த்தின் ஆரம்பம் முதல் 2008 வரையிலும் பல சிறந்த பாடல்களை பாடி கொடி கட்டி பறந்தார் சுஜாதா

அதிகமான பாடல்
சுஜாதா தமிழை பொருத்தவரையில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் தான் அதிகபடியான பாடல்களை பாடியுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ரோஜா படத்தில் வரும் புது வெள்ளை மழை என்ற பாடலை பாடி தமிழ் ரசிகர்களின் நெஞ்சை தன் வசப்படுத்தினார் சுஜாதா. தேவாவின் இசையிலும் பல பாடல்களை பாடியிருக்கிறார். இந்த நேரத்தில் பல ஹிட் பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரர் இவர் தான்

பிறந்த நாள்
சுஜாதா மோகன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சமூக வலைத்தளங்கள் எங்கும் ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். முக்கியமாக சோனி நிறுவனமும் தனது சமூகவலைத்தள பக்கங்களில் இவருக்கு வாழ்த்தை கூறியுள்ளது. சோனி நிறுவனம் போலவே பல முக்கிய நிறுவனங்களும் சுஜாதாவிற்கு தங்களின் வாழ்த்துகளை கூறி வருகின்றனர் .


Click it and Unblock the Notifications











