அது வதந்தின்னு சொன்னாரே.. பிரபல பாடகி 2 வது திருமணம் உண்மைதான்.. திடீர் நிச்சயதார்த்தம்!

By

ஐதராபாத்: தான் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் அது வதந்தி என்றும் கூறி வந்த பிரபல பாடகிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

பிரபல பின்னணி பாடகி, சுனிதா. தெலுங்கு சினிமாவில் ஏராளமானப் பாடல்களை பாடியுள்ளார்.

டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கும் இவர், சில படங்களில் சின்ன கேரக்டர்களில் நடித்துள்ளார்.

விஜய்யின் பத்ரி

விஜய்யின் பத்ரி

இவர், பல நடிகைகளுக்கு டப்பிங்கும் பேசி வருகிறார். தமிழிலும் பல பாடல்களை பாடியுள்ளார். இளையாராஜா இசையில் பாடியுள்ள சுனிதா, விஜய்யின் பத்ரி படத்தில் இடம்பெறும் காதல் சொல்வது உட்பட பல படங்களில், பாடல்கள் பாடி இருக்கிறார். 19 வயதிலேயே திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

பின்னர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டார். இவர் மகள் ஷ்ரேயாவும் பாடகியாக இருக்கிறார். பாடகி சுனிதா பற்றி அடிக்கடி வதந்தி வருவது டோலிவுட்டில் வழக்கம். அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்றும் அவரை காதலிக்கிறார், இவரைக் காதலிக்கிறார் என்று செய்திகள் வந்துபோகும்.

வாட்ஸ் அப் வதந்தி

வாட்ஸ் அப் வதந்தி

இந்நிலையில் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வரும் பதிவுகளை அவர் கண்டு கொள்வதில்லை. இந்த கொரோனா காலகட்டத்தில் இதுபோன்று வந்த வதந்திக்கு உருக்கமான பதிவு ஒன்றை அவர் போஸ்ட் செய்திருந்தார். அதில், என்னை குறி வைத்து வதந்தி பரப்புவதற்காக, வாட்ஸ் அப் குரூப் தொடங்கப்பட்டு இருப்பதாகக் கூறியிருந்தார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பும் அவர் பற்றி வதந்தி பரவியது. அவர் தொழிலதிபர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. பலர் அவருக்கு போன் செய்து விசாரித்தனர். ஆனால், அவர் அதை வழக்கம்போல மறுத்திருந்தார்.

ராம் வீரபனேனி

ராம் வீரபனேனி

இதற்கிடையே, அவருக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தொழிலதிபர் ராம் வீரபனேனி என்பவரை அவர் இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இதுபற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர் அதில் கூறியிருப்பதாவது:

கனவு காண்கிறேன்

கனவு காண்கிறேன்

ஒவ்வொரு அம்மாவையும் போல, என் குழந்தைகளையும் நன்றாக செட்டில் பண்ண வேண்டும் என்று நானும் கனவு காண்கிறேன். அதே நேரம் அற்புதமான, சிந்தனைகொண்ட குழந்தைகளை நான் கொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. அந்த தருணம் கடைசியாக வந்துவிட்டது.

இணைய இருக்கிறோம்

இணைய இருக்கிறோம்

என் வாழ்க்கையில் அற்புதமான நண்பராகவும் சிறந்த பார்ட்னராகவும் ராம், நுழைந்திருக்கிறார். நாங்கள் விரைவில் திருமண பந்தத்துக்குள் இணைய இருக்கிறோம். என் நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்களும் திரைபிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X