Just In
- 5 hrs ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 5 hrs ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 5 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 6 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- News
இளைஞர்களின் எதிர்காலம் என்னாவது...? அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறுக -ஸ்டாலின்
- Automobiles
இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் சீட் அரோனா கார்!! எதற்காக இருக்கும்?
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தொழிலதிபருடன் பிரபல பின்னணி பாடகி 2 வது திருமணம்.. மகன், மகள், திரையுலகினர் வாழ்த்து!
சென்னை: பின்னணி பாடகி சுனிதாவின் இரண்டாவது திருமணம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. அவருடைய மகன், மகள் மணமக்களை வாழ்த்தினர்.
தமிழ், தெலுங்கில் ஏராளமானப் பாடல்களை பாடியிருப்பவர் சுனிதா. இளையராஜா இசையில் தெலுங்கில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் சுனிதா.
பச்சை நிறச் சேலையில் முன்னாள் ஹீரோயினின் ஹோம்லி லுக் போட்டோஸ்.. அப்படி புகழும் நெட்டிசன்ஸ்!
விஜய்யின் பத்ரி படத்தில் இடம்பெறும், காதல் சொல்வது உட்பட பல பாடல்கள் ஹிட்டாகியுள்ளன.

மகனும் மகளும்
டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கும் இவர், சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தும் இருக்கிறார். இவர், பல நடிகைகளுக்கு டப்பிங்கும் பேசி வருகிறார். 19 வயதிலேயே திருமணம் செய்துகொண்ட சுனிதாவுக்கு மகனும் மகளும் உள்ளனர். பின்னர் கணவர் கிரணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்டனர்.

உருக்கமான பதிவு
இவர் மகள் ஷ்ரேயாவும் பாடகியாக இருக்கிறார். பாடகி சுனிதா பற்றி அடிக்கடி வதந்தி வருவது தெலுங்கு சினிமாவில் வழக்கம். அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று அடிக்கடி செய்திகள் வந்துபோகும். இதுபோன்று வந்த வதந்திக்கு உருக்கமான பதிவு ஒன்றை அவர் சில மாதங்களுக்கு முன் போஸ்ட் செய்து மறுத்திருந்தார்.

தொழிலதிபர் ராம்
இதற்கிடையே, அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக மீண்டும் செய்திகள் வெளியானது. முதலில் மறுத்த அவர், பின்னர் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படத்தை வெளியிட்டு, உண்மைதான் என்று கூறியிருந்தார். தொழிலதிபர் ராம் வீரபனேனி என்பவரை அவர் இரண்டாவதாக திருமணம் செய்துகொள்வதாக அறிவித்தார்.

சிறந்த பார்ட்னர்
இதுபற்றி அவர் கூறும்போது, என் வாழ்க்கையில் அற்புதமான நண்பராகவும் சிறந்த பார்ட்னராகவும் ராம் வீரபனேனி நுழைந்திருக்கிறார். விரைவில் திருமண பந்தத்துக்குள் இணைய இருக்கிறோம். என் நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி என்று கூறியிருந்தார்.
இவர்கள் டிசம்பர் 27 ஆம் தேதி ஐதராபாத்தில் திருமணம் செய்துகொள்ள இருந்தனர்.

சீதாராம சுவாமி
இந்நிலையில், இவர்கள் திருமணம் ஜனவரி 9 ஆம் தேதிக்கு தள்ளிப் போனது. இதையடுத்து, இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் அருகிலுள்ள அம்மாபள்ளி, ஶ்ரீ சீதாராம சுவாமி கோயிலில் நேற்று இரவு எளிமையாக நடந்தது. தெலுங்கு முறைப்படி நடந்த இந்த திருமணத்துக்கு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

மகள், மகன் வாழ்த்து
தெலங்கானா அமைச்சர் எர்ரபெள்ளி தயாகர் ராவ், பிரபல தெலுங்கு ஹீரோ நிதின் உட்பட பலர் குடும்பத்துடன் வந்து மணமக்களை வாழ்த்தினர். பாடகி சுனிதாவின் மகள், மகன் மற்றும் திரையுலகினரும் மணமக்களை வாழ்த்தினர். சமூக வலைதளங்களிலும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

டிஜிட்டல் மீடியா
தொழிலதிபர் ராம், தெலுங்கு சினிமா உலகில் நன்கு அறிமுகமானவர். டிஜிட்டல் மீடியா நிறுவனம் ஒன்றின் தலைவரான அவர், தெலுங்கு படங்களின் சாட்டிலைட் உரிமைகளை பெற்று விற்பவர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே திருமணமான ராம் பல வருடங்களுக்கு முன்பே தனது மனைவியை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.