twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாரதியால் தமிழ் கற்றேன்... இசையமைப்பாளர் ஆவதே என் லட்சியம் - பாடகி சுவாகதா

    |

    சென்னை: பாரதி கவிதைகள் முதல் பாப் பாடல்கள் வரை அருவியாய் கொட்டுகிறது சுவாகதாவிடம் இருந்து. பாரதியை நேசித்து அதன் மூலம் தமிழை வாசித்து தமிழ் பாடல்களை தெள்ளத் தெளிவாக பாடி வருகிறார் இந்த மதுரைக்கார இளம் பெண்.

    அட்சர சுத்தமாக தமிழ் பேசக் காரணம் தனது மியூசிக் டீச்சரும் தனது அப்பாவும்தான் என்று கூறுகிறார்.

    Singer Swagatha S Krishnan Exclusive Interview - Filmibeat Tamil

    கரு படத்தில் ஆலாலிலோ... பாடல் பாடி அனைவராலும் அறியப்பட்டவர். காற்றின் மொழி படத்தில் ஜோதிகாவிற்காக டர்ட்டி பொண்டாட்டி பாடல் பாடியிருக்கிறார்.

    தன்னுடைய இசைப்பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் சுவாகதா. காற்றின் மொழி படத்தில் நான் பாடியது க்யூட் மெலடி என்பதை விட ஜோதிகா க்யூட் எக்ஸ்பிரசன் காட்டியிருக்கிறார். வெளிநாடுகளில் பாடப்போனால் பலரும் டர்ட்டி பொண்டாட்டி பாடல் பாடச்சொல்லி கேட்கிறார்கள்.

    பிரேம்ஜி இசையமைத்த படங்களில் நிறைய பெப்பி பாடல்களை பாடியிருக்கிறேன். நல்ல மனிதர். பாசிட்டிவ் எனர்ஜி அதிகம் இருக்கும். நெகடிவ் ஆக எதையும் பேச மாட்டார். பெரிய லெவலுக்கு வருவார் பிரேம்ஜி.

    Singer Swagatha S Krishnan Exclusive Interview - Filmibeat Tamil

    ஜாம்பி படத்தில் இருந்து ஒரு பாடல் பாடியிருக்கிறேன். சீன் பார்ட்டி பாடல் அருமையான பாடல் மாஸ் பாடல். ஆர் யூ ஓகே பேபி. பார்ட்டி படத்தில் ஜிஎஸ்டி பாடல் நானும் இமான் சாரும் பாடியிருக்கிறேன்.

    இளையராஜா சாரிடம் நிறைய பாடியிருக்கிறேன். என் வாழ்க்கையில் கெடைச்ச ஆசீர்வாதம். அற்புதமாக இசையமைத்திருக்கிறார். நான் இசையமைக்க ஆரம்பிக்கும் போது ஒரு நாள் கூட ஆகும் என்று கூறும் சுவாகதாவிற்கு இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்பதே லட்சியம்.

    என்னோட லட்சியமே இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்பதுதான். வாழ்க்கை முழுவதும் வேலை செய்யலாம். எனக்கு எப்போ கிடைக்க வேண்டுமோ அது கண்டிப்பாக கிடைக்கும் என்பதில் ஆழமான நம்பிக்கை உண்டு என்கிறார் சுவாகதா.

    Singer Swagatha S Krishnan Exclusive Interview - Filmibeat Tamil
    சுந்தர கிருஷ்ணன், கீதா தம்பதியரின் மூன்றாவது மகள் நான். அக்கா தங்கைகள் என நான்கு பெண் குழந்தைகள் இருக்கிறோம். பெற்றோர்கள் நன்றாக வளர்த்தார்கள். சுதந்திரமாக எங்கே கண்டிக்க வேண்டுமோ அங்கே கண்டிப்பு இருந்தது. டிவி பார்த்ததில்லை. அதே நேரத்தில் சரியான நிகழ்ச்சியை பார்க்கவும் வைத்தனர். இசையை அறிமுகப்படுத்தினர். எங்களின் படிப்பு தைரியத்தை கொடுத்தது.

    பள்ளி பருவத்தில் இந்தியும் சமஸ்கிருதமும் படித்தாலும் பாரதியார் மீது ஈர்ப்பு. பாரதி கவிதைகளை தமிழில் படித்து தமிழ் கற்றுக்கொண்டேன். அவரைப் போல இன்னொருவர் பிறந்து வர முடியாது என்று கூறும் போதே பாரதி கண்ட புதுமை பெண்ணாக மிளிர்கிறார் சுவாகதா.

    2019ஆம் ஆண்டு இறுதிக்குள் சிறந்த இசையமைப்பாளராக வர வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம்.

    English summary
    Swagatha exclusive interview for Filmibeat Tamil Swagatha is now trending for the song dirty pondatti in Jyothika's katrin mozhi. Swagatha talks about her experience with legendary singer SP Balasubramaniam and Isaignani Ilaiyaraaja. #Swagatha #SwagathaKrishnan #MayaKrishnan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X