India
  For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இத்தனை நாளா இஸ்ரோ மறைச்சு வச்சிடுச்சோ...மாதவனை கிண்டல் செய்யும் டி.எம்.கிருஷ்ணா

  |

  சென்னை : நடிகர் மாதவன் பேசிய விவகாரம் பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் பிரபல பாடகரான டி.எஸ்.கிருஷ்ணாவும் அதுபற்றி இஸ்ரோவின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

  Maamanithan Public Opinion | Vijay Sethupathi | Seenu Ramasamy *Kollywood

  கடந்த சில ஆண்டுகளாக தமிழில் படங்களில் எதுவும் நடிக்காமல் இருந்த நடிகர் மாதவன், தற்போது 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' மீண்டும் நடிக்க வந்தது மட்டுமல்ல, டைரக்டராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

  இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் பயோபிக்காக எடுக்கப்பட்டுள்ள ராக்கெட்ரி படம் ஜுலை 1 ம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான ப்ரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

  பள்ளத்தை நோக்கி உருண்டோடிய நடிகர் செந்திலின் கார்.. பழைய ஜோக் தங்கதூரை மீட்டரா.. என்ன மேட்டரு? பள்ளத்தை நோக்கி உருண்டோடிய நடிகர் செந்திலின் கார்.. பழைய ஜோக் தங்கதூரை மீட்டரா.. என்ன மேட்டரு?

  மாதவன் சொன்ன பஞ்சாங்க தகவல்

  மாதவன் சொன்ன பஞ்சாங்க தகவல்

  சமீபத்தில் நடந்த ப்ரொமோஷன் விழாவில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் மாதவன், ஆயிரம் வருடங்களுக்கு முன் கணிக்கப்பட்ட தமிழ் பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்து செயற்கைகோள்கள் ஏவப்பட்டதாக கூறினார். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்கான மங்கள்யான் திட்டத்திற்கு பஞ்சாங்கம் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

  கலாய்த்த நெட்டிசன்கள்

  கலாய்த்த நெட்டிசன்கள்

  மாதவனின் இந்த பேச்சை நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்தனர். சையின்ஸ் தெரியவில்லை என்றால் பேசாமல் இருங்கள் என்று பலர் கூறினர். மாதவனை கண்டபடி விமர்சித்ததையும் தாண்டி வாட்ஸ்அப் அங்கிள் என்று கூட பட்டப் பெயர் வைத்து கிண்டல் பண்ண துவங்கியனர். மாதவன் விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துக் கொண்டிருந்தது.

  விளக்கம் தந்த இஸ்ரோ விஞ்ஞானி

  விளக்கம் தந்த இஸ்ரோ விஞ்ஞானி

  இதுனால் இது பற்றி இஸ்ரோ விஞ்ஞானியும், மங்கள்யான் திட்ட தலைவருமான மயில்சாமி அண்ணாதுரையிடமே செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், மாதவன் சொன்னதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன் என்ற வார்த்தையை தவிர மற்றவைகள் உண்மை சரி தான். பழைய பஞ்சாங்க அடிப்படையில் தான் கோள்கள் எங்கு இருக்கின்றன, சூரியனுக்கு அவற்றிற்கும் இடையேயான தூரம் ஆகியன கணிக்கப்பட்டன.

  ட்ரோல் மட்டும் நிக்கலியே

  ட்ரோல் மட்டும் நிக்கலியே

  முன்பிருந்தவர்கள் பஞ்சாங்கத்தை மாற்றி அமைத்து வந்தனர். ஆனால் தற்போது அப்டேட் செய்யப்படுவதில்லை. அதனால் பஞ்சாகத்தை வைத்து கோள்களை கணக்கிடுவது சரியாகனதாக இருக்காது என்று நீண்ட அறிவியல் ரீதியிலான விளக்கமும் அறித்தார். இருந்தாலும் மாதவனை ட்ரோல் செய்வதை நெட்டிசன்கள் நிறுத்தவில்லை.

  இஸ்ரோ மறைச்சு வச்சுட்டாங்களோ

  இஸ்ரோ மறைச்சு வச்சுட்டாங்களோ

  இந்த சமயத்தில், மாதவன் பஞ்சாங்கம் பற்றிய கூறிய விவகாரம் பெரிய சர்ச்சையாகி வரும் நிலையில் பிரபல பாடகரான டி.எம்.கிருஷ்ணா, சமீபத்தில் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். மாதவன் பேசிய வீடியோவை பகிர்ந்து அதோடு, இந்த முக்கியமான தகவலை இஸ்ரோ தங்கள் இணையதளத்தில் வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. செவ்வாய் பஞ்சாங்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டிய நேரம் இது என மாதவன் பேச்சை நக்கல் செய்து குறிப்பிட்டிருந்தார். இவரின் இந்த ட்வீட் தற்போது டிரெண்டாகி வருகிறது. செவ்வாய் கிரகத்திற்கு தனி பஞ்சாங்கம் உருவாக்க வேண்டும் என்பதை போல் நக்கல் செய்து டி.எம்.கிருஷ்ணா பதிவிட்டுள்ளதை பலரும் லைக் செய்து வருகின்றனர்.

  யார் இந்த டி.எம்.கிருஷ்ணா

  யார் இந்த டி.எம்.கிருஷ்ணா

  பிரபல கர்நாடக இசை பாடகராஜ டி.எம்.கிருஷ்ணா, எழுத்தாளர், இலக்கியவாதி, சமூக ஆர்வலர் என பல முகங்களைக் கொண்டவர். இவர் சமூகத்தில் நடக்கும் பல முக்கிய விவகாரங்கள் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகம் கருத்து பதிவிடும் பழக்கம் கொண்டவர். அப்படி தான் மாதவன் பேசியதை குறிப்பிட்டு, ட்வீட் போட்டார். அவர் போட்ட ட்வீட் தற்போது பலரையும் ஈர்த்துள்ளது.

  English summary
  Recently Madhavan told tamil Panjangams are used for Mars research. This was trolled by netizens. But Isro scientist Mayilsamy Annadurai explained that nothing wrong in Madhavan's statement. Now singer T.M.Krishna penned that Isro not published this vital info in his website.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X