பார்வையற்ற பாடகர் திருமூர்த்திக்கு கொரோனா பாஸிட்டிவா? தீயாய் பரவும் தகவல்.. சோகத்தில் ரசிகர்கள்!
சென்னை: இளம் பாடகரான திருமூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்தவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி திருமூர்த்தி.
இயற்கையிலேயே பாடும் திறன் மற்றும் நல்ல குரல் வளத்தை கொண்ட திருமூர்த்தி பல பாடல்களை அடி பிசறாமல் பாடி வருகிறார்.

ஷேரான வீடியோ
அந்த வகையில் விசுவாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை அப்பகுதி மக்களிடம் பாடி காண்பித்தார். இதனை தங்களின் செல்போனில் படம் பிடித்த அப்பகுதி இளைஞர்கள் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தனர்.

வாய்ப்பு கொடுத்த இமான்
அந்த வீடியோ ஏராளமான லைக்ஸ்களை பெற்றதோடு பெரும் வைரலானது. அதனை பார்த்த இசையமைப்பாளர் டி இமான், அவரை தொடர்பு கொள்ள உதவுமாறு கேட்டார். இதனைத் தொடர்ந்து திருமூர்த்தி இமானை சந்தித்தார். அதற்கு பலனாக ஜிப்ஸி படத்தில் இடம்பெற்ற செவ்வந்தியே மதுவந்தியே பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்தது திருமூர்த்திக்கு.

கொரோனா உறுதி
கடந்த 6 மாதங்களாக கொரோனா லாக்டவுனால் திருமூர்த்தி வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி திருமூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சோகத்தில் ரசிகர்கள்
அந்த மையத்தில் திருமூர்த்தியுடன் ஏராளமானோர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் திருமூர்த்தி பாடல்களை பாடி வருவதாகவும் கூறப்படுகிறது. தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள போதும் மற்றவர்களை உற்சாகப்படுத்தி வரும் திருமூர்த்தியை பலரும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் கொரோனா தொற்றில் இருந்து அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என்றும் பிரார்த்தித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











