பாடகி உமா ரமணன் மறைவு.. எதிர்பார்க்கவே இல்ல.. கணவர் உருக்கமான வேண்டுகோள்!

சென்னை: பிரபல பாடகியான உமா ரமணன் நேற்றிரவு காலமான நிலையில், அவரின் கணவர் ரமணன் உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மனைவியை இழந்து வாடும் அவருக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் இணையத்தின் வழியாக தெரிவித்து வருகின்றனர்.

பாரதி ராஜா இயக்கத்தில் 1980ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் தான் நிழல்கள். இந்த படத்தில் வாகை சந்திரசேகர், நிழல்கள் ரவி, ரது, மணிவண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்து இருந்த நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப்பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

Singer Uma Raman passes away husband shared emotional video

பாடகி உமா ரமணன்: இதில், பூங்கதவே தாழ் திறவாய் என்கின்ற பாடலை பாடி பாடகியாக அறிமுகமானவர் தான் உமா ரமணன். அந்த பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்ற பாடலாக அமைந்ததைத் தொடர்ந்து, எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா, கங்கை அமரன், ஷங்கர் கணேஷ், எஸ்.ஏ ராஜ்குமார், தேவா, வித்யாசாகர், ஸ்ரீகாந்த் தேவா என அனைத்து இசையமைப்பாளர்களுடன் இணைந்து பாடல்களை பாடி இருக்கிறார் உமா ரமணன்.

பல ஹிட் பாடல்கள்: புதுமைப்பெண் படத்தில் வரும், கஸ்தூரி மானே கல்யாண தேனே பாடல், கேளடி கண்மணி நீ பாதி நான் பாதி, அரங்கேற்ற வேளை படத்தில் வரும் ஆகாய வெண்ணிலாவே என பல சூப்பர் ஹிட் பாடல்களை அவர் பாடி உள்ளார். இவரது கணவர் ஏவி ரமணனும் இசைத்துறையை சேர்ந்தவர் என்பதால், சினிமா மட்டுமில்லாமல் கணவருடன் சேர்ந்து மேடை பாடல்களை பாடி உள்ளார்.

உருக்கமான வீடியோ: இந்நிலையில், உமா ரமணன் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிவைலயில் நேற்று காலமானார். அவருக்கு வயது 69. அவரது மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இசையமைப்பாளர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மனைவி உமா ரமணன் மறைந்தது குறித்து ஏவி ரதணன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எதிர்பார்க்கவே இல்ல: அதில், வணக்கம் நான் ஏவி ரமணன் பேசுகிறேன். என்னுடைய மனைவியான உமா ரமணன் நேற்று மாலை 7.45 மணியளவில், இறைவனடி சென்றார்கள். அவர் இறப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய மகனும் இதை எதிர்பார்க்கவில்லை. இந்த நிகழ்வில் பத்திரிக்கையாளர்கள் மீடியா நண்பர்கள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட சுதந்திரத்தின் காரணமாக, இது உமா ரமணனின் ஆசை என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X