கனவிலும் நினைத்ததில்லை.. உன்னி கிருஷ்ணன் எதுக்காக இப்படி சொல்லியிருக்காருன்னு பாருங்க!

சென்னை : கர்நாடக சங்கீத பாடகர் மற்றும் திரையிசைப் பாடகர் என பன்முக திறமையை உடையவர் உன்னி கிருஷ்ணன்.

இவரை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் தற்போது தன்னுடைய சினிமா மற்றும் கர்நாடக சங்கீதம் குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.

இரு துறையிலும் வல்லமை

இரு துறையிலும் வல்லமை

கர்நாடக சங்கீத பாடல்களில் சிறப்பாக இருப்பவர்கள், சினிமா பாடல்களை பாட முடியாது. அதேபோல திரைத்துறையில் சிறப்பாக விளங்குபவர்கள், கர்நாடக சங்கீதத்தில் சிறப்பாக விளங்க முடியாது. இந்த இரண்டு துறையிலும் சிறப்பாக விளங்குபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

பாடகர் உன்னி கிருஷ்ணன்

பாடகர் உன்னி கிருஷ்ணன்

அப்படி இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களில் முதன்மையான மற்றும் முக்கியமானவர் உன்னி கிருஷ்ணன். கர்நாடக சங்கீத பாடல்களை பாடும்போது அந்த வித்வானாகவே மாறிவிடும் உன்னி கிருஷ்ணன் திரைப்பாடல்களை பாடும்போது தன்னுடைய குரலில் மயக்கும் தொனியை கொண்டுவருவார்.

ஏஆர் ரஹ்மான் இசையில் அறிமுகம்

ஏஆர் ரஹ்மான் இசையில் அறிமுகம்

அதுபோன்று ஏஆர் ரஹ்மானில் ஆரம்பித்து, இளையராஜா உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் கீழ் இவர் சிறப்பான பல பாடல்களை கொடுத்துள்ளார். இவரது முதல் பாடலிலேயே ஜலீர் என ரசிகர்களை கவர்ந்தவர் இவர். இவரின் என்னவளே பாடலை பிரபுதேவா, நக்மாவை பார்த்து பாடும்போது அதை ரசிக்காதவர்கள் இல்லை என்று கூறுமளவிற்கு இந்தப் பாடல் உன்னி கிருஷ்ணனை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது.

பல இசையமைப்பாளர்களுடன் பாடல்

பல இசையமைப்பாளர்களுடன் பாடல்

தொடர்ந்து இளையராஜாவின் இசையில் பல பாடல்களை பாடியுள்ள உன்னி கிருஷ்ணன், வித்யா சாகர், தேவா, ஆதித்யன், எஸ்ஏ ராஜ்குமார், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, சிற்பி, பரத்வாஜ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பல மனதிற்கினிய பாடல்களை பாடியுள்ளார்.

வசீகரமான குரல்

வசீகரமான குரல்

இவரது மயக்கும் வசீகரமான குரலுக்கு மயங்காதவர்கள் இல்லை என்று கூறலாம். ஒரு கட்டத்தில் இவர் பெரிய உன்னி கிருஷ்ணன் என்று ஒரு படத்தில் டயலாக் இடம்பெறும் வகையில் உன்னிகிருஷ்ணன் குரல் அனைவரையும் கவர்ந்தது. தற்போது விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள், சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் காண முடிகிறது.

மகள் உதாராவுடன் இணைந்து பாடல்

மகள் உதாராவுடன் இணைந்து பாடல்

இதனிடையே தற்போது இவரது மகள் உதாராவும் பாடல்களை பாடி வருகிறார். தற்போது கல்லூரியில் படித்து வரும் இவர், தன்னுடைய தந்தையுடன் இணைந்து கச்சேரிகளை செய்து வருகிறார். தன்னுடைய மகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த உன்னி கிருஷ்ணன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்களது இசைப்பயணம் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

கனவிலும் நினைத்ததில்லை

கனவிலும் நினைத்ததில்லை

இந்நிலையில் பிலிமிபீட் தமிழுக்கு உன்னி கிருஷ்ணன் கொடுத்துள்ள பேட்டியில் தான் கர்நாடக இசையையே முழு மூச்சாக செய்து வந்ததாகவும் சினிமா பாடகர் ஆவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவ்வளவு பாடல்களை பாடும் சந்தர்ப்பம் தனக்கு கிடைத்தது கடவுளின் அருள் என்றும் தெரிவித்துள்ளார்.

வேறு வேறு அனுபவங்கள்

வேறு வேறு அனுபவங்கள்

சினிமா பாடல்கள் மற்றும் கர்நாடக இசை இரண்டுமே வேறு வேறு அனுபவங்கள் என்றும் கர்நாடக பாடல்களுக்கு அதிகமான சாதகம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டையும் செய்ய முடிந்தது மிகுந்த சந்தோஷத்தை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இரண்டு துறைகளிலும் ரசிகர்களை சம்பாதித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X