என் புருஷன் ஒரு சாடிஸ்ட்.. விவாகரத்து நடக்க இதுதான் காரணம்.. மனக்குமுறலை கொட்டிய வைக்கம் விஜயலட்சுமி

சென்னை: பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி கடந்த ஆண்டு விவாகரத்து செய்து கொண்ட நிலையில், அது குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளி பாடகியான வைக்கம் விஜயலட்சுமிக்கும் அனுப் என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

ஆனால், சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில், தனது கணவர் ஒரு சாடிஸ்ட் என வைக்கம் விஜயலட்சுமி ரொம்ப ஓப்பனாக பேசியுள்ள பேட்டி ரசிகர்களை உலுக்கி உள்ளது.

வைக்கம் விஜயலட்சுமி

வைக்கம் விஜயலட்சுமி

மலையாளத்தில் வெளியான பிரித்விராஜின் செல்லுலாய்டு படத்தில் இடம்பெற்ற 'கட்டே கட்டே' பாடல் மூலம் பிரபலமானவர் வைக்கம் விஜயலட்சுமி. மாற்றுத்திரனாளி பாடகியான விஜயலட்சுமியின் வித்தியாசமான குரல் மலையாள ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் ராஜு முருகனின் குக்கூ படத்தின் மூலமாக கவர்ந்தது.

சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி

குக்கூ, என்னமோ ஏதோ, காடு, ரோமியோ ஜூலியட், பாகுபலி, தெறி உள்ளிட்ட பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய வைக்கம் விஜயலட்சுமி விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீர சிவாஜி படத்தில் இமான் இசையில் வெளியான சொப்பன சுந்தரி பாடல் மூலம் மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றார். கனா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களிலும் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

நின்றுபோன நிச்சயம்

நின்றுபோன நிச்சயம்

கடந்த 2016ம் ஆண்டு பஹ்ரைன் நாட்டில் வேலை பார்த்து வரும் சந்தோஷ் என்பவர் வைக்கம் விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்ள முன் வந்தார். ஆனால், நிச்சயம் நடைபெற்று முடிந்த சில நாட்களிலேயே மணமகன் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுவதாக அந்த திருமணத்தையே வேண்டாம் என அதிரடியாக நிறுத்தி விட்டார் வைக்கம் விஜயலட்சுமி.

திருமணமும் விவாகரத்தும்

திருமணமும் விவாகரத்தும்

அதன் பிறகு வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம் நடக்குமா? நடக்காதா? என்கிற கேள்விகள் எழுந்த நிலையில், அனூப் என்பவர் வைக்கம் விஜயலட்சுமியை கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் ஆனதில் இருந்தே இருவரது திருமண வாழ்வும் சந்தோஷமாக செல்லாத நிலையில், கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டு இருவரும் பிரிந்தனர்.

மெளனம் கலைந்து

மெளனம் கலைந்து

வைக்கம் விஜயலட்சுமி விவாகரத்து விவகாரம் வெளியானதும் வித விதமான பேச்சுக்களும், விமர்சனங்களும் கிளம்பின. ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டு மெளனம் காத்து வந்த வைக்கம் விஜயலட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முதன் முறையாக விவாகரத்து ஏன் நடந்தது என்பதை வெளிப்படையாக பேசி உள்ளார்.

அவன் ஒரு சாடிஸ்ட்

அவன் ஒரு சாடிஸ்ட்

திருமணம் ஆகும் வரை எந்த சிக்கலும் கொடுக்காமல் இருந்து வந்த மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் மற்றும் இன்டீரியர் டெக்கரேட்டரான அனூப் கொஞ்சம் கொஞ்சமாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தார் என்றும் அவர் ஒரு சாடிஸ்ட் என்றும் திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். தனது பாடும் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கி உள்ளார்.

பல்லை பிடுங்கித்தானே ஆகணும்

பல்லை பிடுங்கித்தானே ஆகணும்

ஆதரவற்ற என் பெற்றோர்களை பார்த்துக் கொள்ளக் கூடாது என உத்தரவிட்டார். மேலும், பல்வேறு வகையில் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து மன நிம்மதியை கெடுத்தார். எப்போது பிரச்சனை வந்தாலும், அதற்கு நீ இப்படி இருப்பது தான் காரணம் என என்னுடைய குறைகளை பற்றியே பேச ஆரம்பித்தார். பல் லேசாக வலித்தால் அதை சரி செய்யலாம். ஆனால், அது மொத்தமாக சொத்தையாகிப் போனால் பிடுங்கித் தானே ஆகணும் என விவாகரத்து குறித்தும் தனது முன்னாள் கணவர் கொடுத்த தொல்லைகள் குறித்தும் பேசியுள்ளார் வைக்கம் விஜயலட்சுமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X