ஆடு மாடு மேய்த்து.. நடையாய் நடந்து.. செருப்பு விடுமிடத்தில் படுத்து.. கண்களை குளமாக்கிய வேல்முருகன்!

சென்னை: பாடகர் வேல்முருகன் பகிர்ந்த அவரது அனுபவம், ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி ரசிகர்களின் கண்களையும் குளமாக்கியது.

Recommended Video

Anitha Vs Suresh நடந்தது என்ன? யாரு மேல தப்பு | Bigg Boss Tamil

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட் முதலில் ரணகளமாகவும் பின்னர் கண்ணீர் களமாகவும் இருந்தது.

இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்ற பிக்பாஸ், ஒருவரை பற்றி ஒருவர் தெரிந்துகொள்ளும் வகையில் கடந்த சீசனில் கதறவிட்டதை போலவே இந்த சீசனிலும் போட்டியாளர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள கூறினார்.

வேல்முருகன்

வேல்முருகன்


இதில் முதல் ஆளாய் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் வேல்முருகன். சிறு வயதில் தான் பட்ட கஷ்டங்களையும் வறுமையுடன் போராடியதை கண்கள் கலங்க கூறி ஹவுஸ் மேட்டுகள் மட்டுமின்றி பார்வையாளர்களின் கண்களையும் குளமாக்கி விட்டார்.

ஆடு மாடு மேய்ப்பேன்

ஆடு மாடு மேய்ப்பேன்

அவர் பேசியதாவது, விருதாச்சலம் பக்கத்தில் உள்ள ஒரு குக் கிராமம்தான் என் சொந்த ஊர். சிறுவயதில் மதிய சாப்பாட்டுக்காகவே அரசுப்பள்ளிக்கு செல்வேன். அங்கிருந்து வாங்கி வரும் சாப்பாட்டை குடும்பத்துடன் பகிர்ந்து சாப்பிடுவோம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரில் உள்ளவர்களின் ஆட்டு மாட்டையெல்லாம் மேய்ப்பேன்.

வறுமையால் அம்மா மரணம்

வறுமையால் அம்மா மரணம்

அவர்கள் கொடுக்கும் காசை வாங்கி குடும்பத்தை ஓட்டுவோம். சனி ஞாயிறு கிழமைகளில் கூட சாப்பாட்டுக்காக எங்க அம்மா பள்ளிக்கூடம் போகலையான்னு கேப்பாங்க.. இன்னைக்கு சனிக்கிழமை, பள்ளிக்கூடம் இல்லன்னு சொல்வேன். ஒருகட்டத்துக்கு அப்புறம் வறுமையின் பிடியிலேயே எங்க அம்மா இறந்துட்டாங்க.

நடந்தே சென்றேன்

நடந்தே சென்றேன்

ஆடு மாடு மேய்க்கும் போதே பாட்டுப்பாடுவேன். அப்புறம் என்ன நிகழ்ச்சி நடந்தாலும் அங்கப்போய் பாட வாய்ப்பு கேட்பேன். பாட வாய்ப்பு கொடுப்பார்கள், நான் பாடுவேன். ஊரில் இருந்தவர்கள் என்னை இசைக்கல்லூரியில் சேர சொன்னார்கள். சென்னையில் உள்ள இசைக் கல்லூரியில் சேர்ந்தேன். அதற்காக தாம்பரத்தில் இருந்து அடையாறுக்கு நடந்தே வந்தேன்.

கடைசியில் படுக்கணும்

கடைசியில் படுக்கணும்

பக்கத்தில்தான் இருக்கும் என்று நினைத்தேன், கையிலும் காசு இல்லை. அதனால் நடந்தே வந்தேன். கல்லுரி ஹாஸ்டலில் படுக்கலாம் என்று போனேன், அங்கிருந்தவர்கள் நாங்கள் படுத்தப்பிறகு, இருக்கும் இடத்தில்தான் நீ படுக்க வேண்டும் என்றார்கள். கடைசியில் இடமே இல்லை.

செருப்பு விடும் இடம்

செருப்பு விடும் இடம்

செருப்பு விடும் இடத்தை துடைத்துவிட்டு நாறும் அந்த நாற்றத்திலேயே பேப்பரை போட்டு அதன் மீது கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து போட்டு படுப்பேன். அப்போதுதான் ராணுவ வீரர்களுக்காக கவிதை ஒன்று எழுதி அனுப்பினேன். அதற்காக அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பரிசு கொடுத்தார்.

அப்போதுதான் பழக்கமானார்

அப்போதுதான் பழக்கமானார்

அப்போதுதான் கல்லூரியில் பிரேயர் கூட்டத்தில் என்னை அழைத்து கொடுத்தார்கள். அப்போதுதான் எனக்கு ஒருவர் பழக்கமானார். அப்போதெல்லாம் நான் ரொம்ப ஒல்லியா கறுப்பா இருப்பேன் என்னிடம் ஒருவர் பழகுவதெல்லாம் பெரிய விஷயம். பொங்கலுக்கு எல்லோரும் அவரவர் ஊருக்கு போனார்கள்.

யாரும் இல்லை

யாரும் இல்லை

நான் போகவில்லை. அதனால் நீங்கள் ஊருக்கு போகவில்லையா வீட்டில் அப்பா அம்மா கோபித்து கொள்ள மாட்டார்களா என கேட்டார். எனக்கு அப்பா அம்மா என யாரும் இல்லை என்றேன். அப்போது முதல் அவருக்கு என் மீது அன்பு அதிகமாகிவிட்டது.

படிக்க வைக்கிறேன்

படிக்க வைக்கிறேன்

இருவரின் திருமணத்திற்கும் அவர்கள் வீட்டில் சம்மதிக்கவில்லை. இதனால் 50000 ரூபாய் பணம் சேர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அப்புறோம் எல்லாரும் ராசி ஆயிட்டாங்க. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து அவரை படிக்க வைத்து வருகிறேன். இப்போது டாக்ட்ரேட் பண்றாங்க.

கண்கள் கலங்க..

கண்கள் கலங்க..

எனக்கு முதலில் பாட விஜய் டிவியின் யார் மனசுல யாரு நிகழ்ச்சியில்தான் வாய்ப்பு கிடைச்சுது. அதை பார்த்துட்டுதான் ஜேம்ஸ் வசந்த் சார் எனக்கு சுப்ரமணியபுரம் படத்துல பாட வாய்ப்புகொடுத்தார். இதுவரைக்கும் 350 பாடல்கள் பாடியுள்ளேன். இவ்வாறு முடித்தார் வேல்முருகன். ஆனால் பேசும் போது பல இடங்களில் பேசு முடியாமல் கண்கள் கலங்கி நா தழுதழுத்தார் வேல் முருகன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X