பாடும் நிலா பாலு சாரு..சீக்கிரம் குணமடைந்து வருவார் பாரு...வேல் முருகன் பாடிய பாடல்! வைரல்!
சென்னை :பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களாக நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, நேற்று திடீரென அதிகமான மூச்சுத் திணறல் ஏற்பட்டதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசமும் பொருத்தப்பட்டது.
Recommended Video

நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்கள்.இந்த செய்தியை கேட்ட அணைத்து ரசிகர்களும் பேர் அதிர்ச்சி அடைந்தனர்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டும் என்று சினிமா பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியனின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது .அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .

இந்நிலையில், பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலம் பெற வேண்டும் என்று பாடல் பாடி இருக்கிறார். 50 வருடமாக அசையாத விருட்சமாக பாட்டு தேர் ஏறி பவனி வரும் பாடும் நிலா பாலு சார், சீக்கிரம் குணமடைந்து வருவார் பாரு... என்ற பாடலை பாடி வெளியிட்டிருக்கிறார்.அனைவரின் பிராத்தனைகளும் கடவுளின் செவிகளுக்கு கேட்டு விட்டது போல தற்போது எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்து உள்ளது .இப்போது தான் அணைத்து சினிமா பிரபலங்களும்,ரசிகர்களும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கின்றனர் ,இருந்தும் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனைவரும் தொடர்ந்து பிராத்தனை செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











